கோகுலாஷ்டமி ஸ்பேஷல் இனிப்புச் சீடை
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் உளுந்தம்பருப்பு - 1 - 1 1/2 டீஸ்பூன் வெல்லம் - 1/2 கப் வெள்ளை எள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு ஏலக்காய் பொடி - சிறிது செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். அதே கடாயில் அரிசி மாவையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பாகு பதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தாலே போதும். ஒரு மிக்ஸிங் பவுலில் அரிசி மாவு மற்றும் வெல்லக் கரைசலைச் சேர்த்து பிசையவும். அதில் எள் மற்றும் வறுத்து பொடித்த உளுந்தம் மாவையும் சேர்த்து பிசைந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூடான சுவையான இனிப்புச் சிடை தயார். குறிப்பு: சீடை உடையாமலிருக்க மாவை ஒன்று அல்லது இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். உருண்டை தட்டும் போது ...