கோகுலாஷ்டமி ஸ்பேஷல் இனிப்புச் சீடை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

உளுந்தம்பருப்பு - 1 - 1 1/2 டீஸ்பூன்

வெல்லம் - 1/2 கப்

வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

ஏலக்காய் பொடி - சிறிது

செய்முறை:

  • முதலில் உளுத்தம் பருப்பை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும்.
  • அதே கடாயில் அரிசி மாவையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து காய்ச்சி  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 
  • பாகு பதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தாலே போதும்.
  • ஒரு மிக்ஸிங் பவுலில் அரிசி மாவு மற்றும் வெல்லக் கரைசலைச் சேர்த்து பிசையவும். 
  • அதில் எள் மற்றும் வறுத்து பொடித்த உளுந்தம் மாவையும் சேர்த்து பிசைந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் வைத்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • சூடான சுவையான இனிப்புச் சிடை தயார்.
குறிப்பு:
  1. சீடை உடையாமலிருக்க மாவை ஒன்று அல்லது இரண்டு முறை சலித்துக் கொள்ளவும்.
  2. உருண்டை தட்டும் போது அழுத்தமாக இல்லாமல் லேசாக மூன்று விரல்களைக் கொண்டு உருட்டவும்.
  3. வெடிப்பு இல்லாமலிருக்க சிறிய ஊசிக்கொண்டு சீடையை துளையிட்டுக் கொள்ளவும். 
  4. பொரிப்பதற்கு 20 நிமிடத்திற்கு முன்பே ஊருட்டி வைத்துக் கொள்ளவும்.
  5. சீடையின் நிறம் உளுந்தை வறுப்பதை பொறுத்தது. நன்கு சிவக்க வறுத்தால் சீடையின் நிறம் நன்கு அடர்ந்த நிறத்தில் இருக்கும்.
  6. சீடை எண்ணெய்யில் கரைந்தால் அதற்கு 2 காணரங்கள். ஒன்று வெல்லம் அதிகமாக இருக்கும். இல்லையென்றால் எண்ணெய் அதிக சூட்டுடன் இருக்கலாம்
  7. மிதமான சூட்டுடன் எண்ணெய் இருப்பது மிகவும் முக்கியம். மிதமான சூட்டுடன் இருந்தால் மட்டுமே சரியான நிறத்துடன் மொறுமொறுப்பான சீடை கிடைக்கும்



**** For More Interesting things Click the links ****


Comments

Popular posts from this blog

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

பன்னீர் சப்ஜி | Paneer Sabji | Paneer Gravy Masala Recipe | Lees Kitchen

சத்தான சீரக சாதம் | Matar Jeera Rice | Cumin Rice | Jeera Matar Pulao Recipe in Tamil | lees kitchen