உடல் என்னும் இயந்திரம்

இயற்கைக்கு மீறிய எச்செயலும் நோயை உண்டு பண்ணும் என்பது தெளிவு. இயற்கையோடு இயைந்ததே இந்த உடல்.

இதை தான் சித்தர்கள்
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம் 
என்று குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறு இந்த உலகமானது அண்டம், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம், மண் என்னும் ஐம்பூதங்களால் ஆனது

இந்த பூவுலகில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் இந்தப் பூவுடலிலும் ஏற்படுகின்றன. இதனால்தான் வேனிற்காலத்தில் அம்மை, மஞ்சள் காமாலை, கட்டிகள் போன்ற வெப்பம் காரணமான நோய்களும், குளிர்காலத்தில் இரைப்பு, இளைப்பு, பீனிசம் போன்ற குளிர்ச்சி சம்பந்தமான நோய்களும் உடலில் தோன்றுகின்றன. அதுமட்டுமல்லாமலும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் உண்டாகும் கதிர்வீச்சு மாற்றம் உடலிலும், மனதிலும் பல பேருக்கு பாதிப்பை உண்டாக்குவதை கண்கூடாகக் காணலாம்.

இயற்கை அளித்த இந்த உடம்புதான் எத்தகைய அற்புதமானது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்பும் இயற்கையை படைத்த இறைவனால் எப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடும் அறிவியல் பூர்வமாக ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளனவே. அதுதான் மெய்ஞானத்தின் வலிமை
  • வெயிலில் கருகாமல் மழையில் கரையாமல் மூளையைக் கவசமாய் காக்கும் முடிக்கற்றைகள்
  • நிஜத்தை பார்வையாலே நிரூபிக்கும் காமிராவாக அழகான கண்கள்
  • இமைப்பதையே உணராமல் இமையோரத்தில் ஷாக் அப்ஸார்பராக ரோமம் கொண்ட இமைகள்
  • ஒலிப் பிசிறிலில்லாமல் சைனஸ் அறை சைலனசர்களால் சாகும் வரை சுவாசிக்கும் எடுப்பான மூக்கு
  • உணவுப்பொருளை அரைத்து செரிமானத்தை அதிகப்படுத்தும் கிரைண்டர்களாக பற்கள்
  • சப்த ஸ்வரங்களையும் சரியாக புரிய வைக்கும் மைக்காக காதுகள்
  • காலம் முழுவதும் சுருங்கி விரிந்தாலும் பஞ்சர் ஆகாத காற்றறைச் சுவாசப்பைகள்
  • சாகும் வரை மூடித்திறக்கும் பழுதாகாத வால்வுகளை கொண்ட இதயம்
  • சத்தையும், நஞ்சையும் சேமித்து பிரித்து வைக்கும் சேப்டி லாக்கராக கல்லீரல்
  • உணவை கிரகித்து இரத்தமாக மாற்றும் டிரான்ஸ்பார்மர்களாக வயிற்றுப்பை குடல்
  • உடம்புக்கு சக்தியளிக்கும் சர்க்கரையை நிலைப்படுத்தும் இன்வர்ட்டராக கணையம்
  • கழிவுநீர், துர்நீரை வெளியேற்றும் ட்ரெயினேஜ் பம்புகளாக சிறுநீரகங்கள்
  • அச்சு அசலாய் நகலெடுக்கும் குளோனிங் எந்திரங்களாக இனப்பெருக்க உறுப்புகள்
  • உழைக்க, வேலையை சுலபமாக்க நீட்டி மடக்கும் கிரேன்களாக கை கால் விரல்கள் நகங்கள்
  • எலும்புகளை நீட்டி மடக்க மூட்டுகள், அசைவை சுலபமாக்கும் கிரீஸ் பசையாக உயவுப் பொருட்கள்
  • நிலங்களை வளமாக்கும் ஆற்றுநீர் போல் உடலெங்கும் தங்கு தடையின்றி ஓடும் இரத்தம்
  • இவைகளையெல்லாம் ஆட்டிப்படைக்கும் கம்யூட்டர் சக்தியாக மூளை
  • மூளையுடன் இணைந்த ஒயர் பின்னல்களாக நரம்பு மண்டலம்
  • நரம்புகள் அனைத்தையும் மூடி பாதுகாக்கும் போர்வையாக தோல்
  • அறிவியல் இயந்திர தொழிற்சாலையாக அமைந்த இந்த உடல் இயங்க உதவும் சக்தியாக உயிர்
இந்த உயிருடன் கூடிய உடல் என்னும் ஒரு இயந்திரத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் சிறு பழுது ஏற்பட்டாலே போதும். ஒவ்வொரு இயந்திரமாக செயலிழந்து உயிர் சக்தி நின்றுவிடும். இந்த உயிர் சக்தியை நிலைநிறுத்தி, உடலில் பிணி வராமல்  காப்பதையே சித்தர்கள் காயகல்பம் என்றழைத்தனர்.

**** For More Interesting things Click the links ****

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza