மொறு மொறு பக்கோடா

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
கடலை மாவு - 4 மேசைக்கரண்டி
பூண்டு - 4 பல்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

  • முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். பூண்டை இடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸிங் பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் சூடான  எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு பிசையவும்.
  • தண்ணீர் தெளித்து  தெளித்து வெங்காய கலவையை பிசையவும்.
  • சூடான எண்ணெய்யில் வெங்காயத்தை பொறித்து எடுக்கவும்.
  • சுவையான வெங்காய பக்கோடா ரெடி.



Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்