உங்கள் குழந்தைகள் ஸ்ட்ராங்கா, ஷார்ப்பா வரனுமா !

சத்துமாவு


தேவையான பொருட்கள்
  1. கோதுமை - 1/2 கிலோ
  2. சாமை - 1/4 கிலோ
  3. திணை - 1/4 கிலோ
  4. குதிரைவாலி - 1/4 கிலோ
  5. கம்பு - 1/4 கிலோ
  6. சோளம் - 1/4 கிலோ
  7. மக்காச்சோளம் - 1/4 கிலோ
  8. ராகி (கேப்பை) - 1/4 கிலோ
  9. ஜவ்வரிசி - 1/4 கிலோ
  10. பார்லி அரிசி - 1/4 கிலோ
  11. கொள்ளு - 1/4 கிலோ
  12. கருப்பு உளுந்து 1/4 கிலோ
  13. சிவப்பு அரிசி - 1/4 கிலோ
  14. வரகு அரிசி - 1/4 கிலோ
  15. பாசி பயறு - 1/4 கிலோ
  16. கவுனி அரிசி - 1/4 கிலோ
  17. சுண்டல் - 1/4 கிலோ
  18. சுக்கு - 50 கிராம் ( தோல் நீக்கியது)
  19. ஏலக்காய் - 5 கிராம்
  20. முந்திரி - 100 கிராம்
  21. பாதாம் - 100 கிராம்
செய்முறை
  • 3 தேக்கரண்டி சத்துமாவுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து அதனுடன் 1 டம்ளர் பால்சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி நாட்டுசர்க்கரை சேர்த்து  குடிக்கலாம். 
  • டீ மற்றும் காபி அருந்துவதற்கு மாற்றாக இதனை குடிக்கலாம். நல்ல ருசியாகவும் இருக்கும் அத்துடன் சக்தியும் கிடைக்கும்.
  • மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் இதனை அருந்தலாம். இதனை வறுத்து அரைப்பதால் 6 மாதம் வரை கொடாமல் இருக்கும். காற்றுபுகாத டப்பாக்களில் வைத்து பயன்படுத்தவும். 
  • கஞ்சியாக மட்டுமல்லாமல் உருண்டைகளாக செய்து சாப்பிடலாம். கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தவும்.
பயன்கள்
  • உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
  • புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.
  • உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமலும் அதே நேரத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது.

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்