தொப்பைக்கு குட்பை

தொப்பையைக் குறைப்பதற்கு நாம்  எதையெதை சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இது தான்  முதல் படி.

துரித உணவுகள் சாப்பிடுவதில் யாருக்கு தான் ஆசை இல்லை? ஆனால் அவற்றால் உடலின்  மையப்பகுதியான வயிற்றில் சேரும் கொழுப்பைக் குறைப்பதென்பது சுலபமான காரியமில்லை.

உங்களுக்கு எதில் விருப்பம் அதிகம்?
துரித உணவுகள் வேண்டுமா அல்லது தொப்பை இல்லாத வயிறு வேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்
உடல் எடையை குறைக்க  சாப்பிட வேண்டியவைகள்:
  • பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, ஆப்பிள், தர்பூசணி
  • காய்கறிகள்: முட்டைகோஸ், ப்ரோக்கோலி, கீரை, பீன்ஸ், பட்டாணி
  • இதரவைகள்: ஓட்ஸ், பாதாம் பருப்பு, முட்டை, தண்ணீர்
  • மீன் வகைகள் : காலமன், கானாங்கெழுத்தி, டூனா 
  • ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி ஆகிய பழங்கள் சிறந்த கொழுப்புருக்கிகளாக செயல்படுகின்றன, வைட்டமின்சி அதிகமுள்ள இப்பழங்கள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து வேகமாக கொழுப்பை உருக்குகின்றன. ஆகவே உடல் எடை குறைப்பை துவங்கியவுடன் ஆரஞ்சு பழங்களுடன், ஆப்பிள், தர்பூசணி போன்ற கொழுப்புருக்கிப் பழங்களை உட்கொள்ளுதல் நல்லது.
  • தாதுக்கள் அதிகமுள்ள முட்டைகோஸ், ப்ரோக்கோலி, கீரை, பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளில் கொழுப்புச்சத்து அறவே கிடையாது. இவற்றை சமைப்பதற்குப் பதிலாக வேக வைத்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்
  • முளைப்பயிர்களிலும்அமினோ அமிலம் அதிகமுள்ளதால் அவற்றை உட்கொள்வது நல்லது
  • ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து பசியைக் குறைத்து பலமணி நேரத்திற்கு சக்தியுடன் வைத்திருக்கிறது
  • ஒரு கையளவு பாதாம் பருப்பு சாப்பிட்டால் பல மணி நேரம் பசியற்ற உணர்வை உருவாக்குகிறது
  • புரதம் அதிகமுள்ள முட்டையில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதோடு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது
  • சாலமன், கானாங்கெழுத்தி, டூனா மீன்களில் புரதம் அதிகமாக இருப்பதால், வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன, ஒமேகா3 அமிலம் வயிற்றுக் கொழுப்பை கரைக்கிறது
  • வளர்சிதை மாற்றத்தை ஊக்கபடுத்தும் நீரை அதிகமாக அருந்துதல் உடல் எடைக் குறைப்பிற்கு நல்லது




Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்