கொய்யாப் பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்: கொய்யாப்பழம் - 1 மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி இந்துப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - தேவைக்கேற்ப செய்முறை: கொய்யாப்பழத்தை நன்றாக கழுவி துருவி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கையால் பிசையுங்கள் அல்லது மத்தால் கடையுங்கள் அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள், சீரகம் சேர்த்துச் சாப்பிடுங்கள் இனிப்பு தேவையெனில் இந்துப்பை தவிர்த்து வெல்லத்தூள் தேவைக்கு சேர்த்து பருகலாம் பயன்கள்: வைட்டமின் சி சத்துள்ளது, மலச்சிக்கலை அகற்றுகிறது. சாப்பாட்டிற்குப் பின் சாப்பிட ஏற்ற உணவாகிறது. வைட்டமின் சி சத்து நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. மேலும் நோய் தொற்று கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது **** For More Interesting things Click the links **** Blogg: https://leelatamilkitchen.blogspot.com/ Facebook: https://www.facebook.com/23LeelaKitchen Youtube: http://www.youtube.com/c/LeesKitchen