பசியின்மைக்கு அருமையான மருந்து
இஞ்சி அல்வா:
தேவையான பொருட்கள்:
- இஞ்சி சாறு - 1/2 கப்
- பேரீச்சம் பழம் - 500கிராம் (கொட்டை நீக்கியது)
- வெல்லம் - 1 கப் (பொடித்தது)
- ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு - 25 கிராம்
செய்முறை:
- இஞ்சி சாறில் பேரீச்சம் பழம் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்
- ஊறிய பின் அதனை மிக்ஸி அல்லது உரலில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- அரைத்த விழுதுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
- பின்னர் வறுத்த முந்திரிப்பருப்பு இவைகளை சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
- ஒரு தட்டில் நெய் சேர்த்து இஞ்சி அல்வா பரப்பி விடவும்.
- பின் தேவையான வடிவத்தில் தூண்டு போட்டு சாப்பிடவும்.
- நெய் சேர்க்க விரும்புவோர் தேவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்
- காலையில் சாப்பிடுவது மிகவும் ஏற்றது.
பயன்கள்:
- பசியின்மையைப் போக்கி நாவிற்கு நல்ல ருசியை தருகிறது
- உடலுக்கு வலிமையை தருகிறது.
- வாத கோளாறுகள் வாராமால் தடுக்கிறது
- இரத்தக்குழாய்களில் கொழுப்புகளால் ஏற்படும் அடைப்பை நீக்கிவிடும்
- நார்சத்து இவற்றில் அதகளவில் உள்ளது
**** For More Interesting things Click the links ****
Comments
Post a Comment
subscribe Media 1 Television