ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza
ஹோம்மேட் பீட்சா
தேவையான பொருட்கள்
பீட்சா பேஸ் செய்வதற்கு
மைதா மாவு - 1 கப்
தயிர் - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
பீட்சா சாஸ் செய்வதற்கு
நல்ல சிகப்பு தக்காளி - 6
வெங்காயம் - 1
காஸ்மீரி மிளகாய் - 4
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
வெள்ளைப்பூடு - 10 சிறியது
டெமேட்டோ கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சில்லிப்ளக்ஸ் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஓரிகேனோ -1/2 டீஸ்பூன்
பேசில் -1/2 டீஸ்பூன்
காய்கறிகள் - விருப்பதிற்கேற்ப
பெரிய வெங்காயம் சிறியது - 1
ஸ்வீட் கார்ன் - 1
குடை மிளகாய் - பாதி
மொஸரெல்லா சீஸ் - துருவியது
செய்முறை
சாஸ் செய்வதற்கு
- முதலில் தக்காளியை நன்கு கழுவி அதில் வெங்காயம் மற்றும் காஸ்மீரி மிளகாய் ஆகியவையுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் வேகவைத்த தக்காளியை தோலுரித்துக் கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் வெங்காயம் காஸ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு இடித்த வெள்ளைப்பூடு சேர்த்து நன்கு வதக்கவும்
- அதன்பிறகு தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறி கொதிக்கவிடவும்.
- அடுத்துபடியாக டெமேட்டோ கெட்சப் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- ஒரு கொதி வந்ததும் சில்லி ப்ளக்ஸ், சர்க்கரை, ஓரிகேனோ, பேசில் சேர்த்து கிளறவும். சிறிது கெட்டியானதும் இறக்கவும். சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய பீட்சா சாஸ் தயார்
பீட்சா பேஸ் செய்வதற்கு
- ஒரு மிக்ஸிங் பவுலில் மைதா மாவு எடுத்துக்கொள்ளவும்
- அதில் தயிர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், எண்ணெய் ஆகியவைவற்றைச் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
- தேவைப்பட்டால் சிறது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அதன் பின்னர் ஒரு தட்டையான வட்ட தட்டில் மாவை சப்பாத்தி போல் திரட்டி வைக்கவும்.
- மெல்லியதாக திரட்டாமல் சற்று தடிமனாக தேய்க்கவும். திரட்டிய மாவின் மீது ஆங்காங்கே துளையிடவும்.
- பெரிய வெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
- ஸ்வீட் கார்ன்னை சிறிது உப்புச் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- குடைமிளகாயையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- பீட்சா பேஸ் மீது பீட்சா சாஸ் முழுவதுமாக பரப்பி விடவும். துருவிய மொஸரெல்லா சீஸ் ஒரு லேயர் சேர்க்கவும்.
- பின்னர் காய்கறிகளை விருப்பதிற்கேற்ப அலங்கரிக்கவும். அடுத்த லேயர் சீஸ் சேர்க்கவும்.
- அவனை ப்ரீ ஹீட் செய்து 450 ஃப்ரன்ஹட் அல்லது 230 செல்சியஸில் சுமார் 15 முதல் 17 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- சுடான சுவையான ஹோம்மேட் பீட்சா தயார்.
**** For More Interesting things Click the links ****
Comments
Post a Comment
subscribe Media 1 Television