தேவையான பொருட்கள்: பன்னீர் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 4 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் காஷ்மிரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 2 உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லி தழை - சிறிது செய்முறை: பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் தனிதனியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டிய பன்னீரை பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதன் பின்னர் பொரித்த பன்னீரை சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான பன்னீர்...
Comments
Post a Comment
subscribe Media 1 Television