காய்கறிகளை எவ்வாறு தரமாக வாங்குவது?


தக்காளி:
                நல்ல சிவப்பாக இருக்கிற தக்காளிய வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் கெடாம இருக்கும்

புடலங்காய் :
                கெட்டியாக இருந்தால் தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

முருங்கைக்காய் :
                முருங்கைக் காயை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்லக்காய்

கோவைக்காய் :
                முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க கூடாது. ஏனென்றால் பழுத்தது ருசி இல்லாமல் இருக்கும்

பீர்க்கங்காய்:
                அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கனும். இந்த காயில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும்

பரங்கிக்காய்:
                கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

காலிபிளவர்:
                பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

குடை மிளகாய் :
                தோல் சுருங்காமல்  இருப்பதை வாங்கவும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையிலுள்ளது தான். 
மேலும்  கரும்பச்சையிலிருந்தால் அந்த காய் அடிபட்டிருக்கும்.

பச்சை மிளகாய் :
                நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையாக இருக்கும்

இஞ்சி:
                லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது அப்படி இருக்குற இஞ்சியில் தான் நார் பகுதி குறைவாக இருக்கும்

கத்திரிக்காய்:
                தோல் மென்மையாக இருக்க வேண்டும்.

சுரைக்காய் :
                நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்கினால் தான் இளங்காய்னு அர்த்தம்

பூண்டு:
                பல் பல்லாக வெளியே தெரிய வேண்டும்.

பீன்ஸ்:
                பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் மென்மையாக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

அவரை:
                தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருந்தால் அது முற்றிய காய் என்று அர்த்தம் அதில் நார் அதிகமாக இருக்கம். இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

பாகற்காய்:
                பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் தான் நல்லது.

வாழைப்பூ :
                மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

மொச்சை :
                கொட்டை பெரிதாக தெரியும் காய் தான் நல்லது.

சௌசௌ :
                வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாம இருந்தால் அது இளம்காய். விரிசல் இருந்தால் முற்றிய காய்

முள்ளங்கி:
                லேசாக கீறினால் தோல் மென்மையாக இருக்க வேண்டும்.

வெள்ளரி:
                மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்க வேண்டும் அவ்வாறு இருக்கும் காயில் விதைகள் குறைவாக இருக்கும்.

வாழை தண்டு:
                மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருக்க வேண்டும்.

மக்கா சோளம்:
                மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். மேலும் இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் இருக்க வேண்டும்.

சின்ன வெங்காயம்:
                பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

 பெரிய வெங்காயம்:
                மேல் குடுமி பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் இருக்க  வேண்டும்.

வெள்ளை வெங்காயம்:
                நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

மாங்காய்:
                காதருகே வைத்து தட்டி பார்த்தால் சத்தம் வர வேண்டும். அவ்வாறு இருந்தால் கொட்டை சிறிதாக இருக்கும்

தேங்காய்:
                காதருகே வைத்து தட்டி பார்க்க வேண்டும். நிற‌ம் வெளு‌ப்பாக இருக்க வேண்டும் கறு‌த்‌திரு‌க்க கூடாது. குடு‌மி‌ப் பகு‌தி‌யை ‌லேசாக இழுத்தால் ஒரு ‌சில முடிக‌ள் த‌னியாக வ‌ந்தா‌ல் அ‌து முற்றிய கா‌‌ய். ஒ‌வ்வொரு நாறும‌் ஒ‌ன்றோடு ‌ஒ‌ன்று இணை‌ந்து  ‌‌சி‌க்காக இரு‌ந்தா‌ல் அ‌ந்த இளங்காய் 

உருளை கிழங்கு:
                முளை விடாமல் பச்சை நரம்பு இல்லாமல்  கீறினால் தோல் உதிர்ந்து  வர வேண்டும்

கருணை கிழங்கு:
                முழுதாக வாங்கும் போது பெரிய கிழங்காக இருக்க வேண்டும். வெட்டிய கிழங்கு என்றால் உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்

சேப்பங்கிழங்கு :
                உருண்டையாக இருக்க வேண்டும். முளை விட்டு ஒரு முனை நீண்டிருக்க கூடாது.
சர்க்கரை வள்ளிகிழங்கு:


                உறுதியாக இருக்க வேண்டும். அந்த கிழங்கு இனிக்கும் ஆனால் அடி பட்டு கருப்பாக இருந்தால் கிழங்கு கசக்கும்.

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்