பட்டுப் புடவையை பராமரிப்பது எவ்வாறு?
பட்டுப் புடவை வைத்திருக்கும் அலமாரி, பீரோவுக்குள் வசம்பு போட்டு வைக்க வேண்டும். அதனால் பூச்சிகள் வருவது தடுக்கப்படும்.
உடுத்திய புடவையை நிழலில் சிறிது நேரம்உலர்த்திய பின்னர் மடித்து வைக்க வேண்டும்.
பட்டுப்புடவையை 3 மாத்திற்கு ஒரு முறை பிரித்து, மடித்து வைக்க வேண்டும்.
புடவையின் மீது வாசனை திரவியங்கள் அடிக்கக் கூடாது. வாசனை திரவியங்களால் ஜரிகை கருத்து போய்விடும்.
கைப்பிடியளவு பூந்திக் கொட்டையைப் பொடித்து தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். மறு நாள் நுரைத்து வந்து விடும். அதனை வடிகட்டி, அந்தத் தண்ணீரில் பட்டுப் புடவையை அலசினால், பளபளப்புடன் இருக்கும்.
Comments
Post a Comment
subscribe Media 1 Television