மனித உடல் உயிர் கடிகாரம்
நம்முடைய உடலிலுள்ள முக்கிய 12 உடல் உள்ளுறுப்புகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்து வருகிறது.
அதிகாலை 3 முதல்-5 வரை
நுரையீரலுக்கான நேரம்
காலை 5 முதல் - 7 வரை
பெருங்குடலுக்கான நேரம்
காலை 7 முதல் - 9 வரை
வயிற்றுக்கான நேரம்
காலை 9 முதல் - 11 வரை
மண்ணீரலுக்கான நேரம்
காலை11 முதல் - 1 வரை
இதயத்திற்கான நேரம்
பிற்பகல் 1 முதல் - 3 வரை
சிறுகுடலுக்கான நேரம்
பிற்பகல் 3 முதல் - 5 வரை
சிறுநீர்பைக்கான நேரம்
மாலை 5 முதல் -7 வரை
சீறுநீரகங்களுக்கான நேரம்
இரவு 7 முதல் - 9 வரை
பெரிகார்டியத்திற்கான நேரம்
இரவு 9 முதல் - 11 வரை
டிரிப்பிள் ஹீட்டர்கான நேரம்
இரவு 11 முதல் - 1 வரை
பித்தப்பைக்கான நேரம்
இரவு 1 முதல் - 3 வரை
கல்லீரலுக்கான நேரம்
இந்த உடல் உயிர் கடிகாரத்தின் படி ஒவ்வொறு உறுப்பும் தன் அதிகப்படியான இயக்கத்திற்கு 2 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில் அந்த உறுப்பில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அது நமக்கு ஒரு சில அறிகுறிகளை சுட்டிக்காட்டும். அப்படி சுட்டிகாட்டும் நேரத்தைக் கொண்டு எந்த உறுப்பு பாதிப்படைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
1 am - 3 am கல்லீரலுக்கான நேரம்
இந்நேரத்தில் கல்லீரல் உணவுகளை செரிப்பதற்கு பித்தநீரை அதிகம் சுரக்கும் பணியில் ஈடுபட்டிப்பதோடு நச்சுக்களையும் வெளியேற்றிக் கொண்டிருக்கும். இந்நேரத்தில் ஒருவருக்கு தூக்கம் கலைந்தால் கல்லீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்
3 am - 5 am நுரையீரலுக்கான நேரம்
இந்நேரத்தில் நுரையீரல் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை சேகரித்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும். நுரையீரல் அல்லது சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் இந்நேரத்தில் தூக்கம் கலையும்
5am -7am பெருங்குடலுக்கான நேரம்
இந்நேரத்தில் பெருங்குடல் சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்து விடும். குடலியக்க பிரச்சனையான மலம் வெளியேற்றுவதில் பிரச்சனை இருப்பவர்கள் இந்நேரத்தில் வயிற்று பிரச்சனைகளை சந்திப்பார்கள். மேலும் இந்நேரத்தில் நீரை அதிகம் குடித்தால், இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
7 am - 9 am
இந்நேரத்தில் உடலுக்கு ஆற்றைலை வழங்க காலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்
9 am - 11 am கணையம் மற்றும் மண்ணீரலுக்கான நேரம்
இந்நேரத்தில் இவை இரண்டும் அதனதன் பணியை செய்யும்.
11 am - 1 pm இதயத்திற்கான நேரம்
இந்நேர்த்தில் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் மிகுந்த சோர்வை உணர்ந்தால் இரத்த ஓட்டத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். மேலும் இதுதான் மதியஉணவுக்கான நேரம்
1 pm - 3 pm சிறு குடலுக்கான நேரம்
இந்நேரத்தில் உணவுகள் உடலால் உறிஞ்சப்படுவதால் இந்நேரத்தில் உடலில் ஆற்றல் சற்று குறைவாக இருக்கும்
3 pm - 5 pm சீறுநீர்ப்பைக்கான நேரம்
இந்நேரத்தில் உடலில் ஆற்றல் தக்க வைக்கப்படும். மேலும் உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்.
5 pm - 7 pm சீறுநீரகங்களுக்கான நேரம்
இந்நேரத்தில் சீறுநீரகங்கள் தங்களது பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் இரவு உணவை உட்கொள்வது நல்லது
7 pm - 9 pm இதயத்தை சுற்றியிருக்கும் சவ்வுக்கான நேரம்
இந்நேரத்தில் அவை ஓய்வு எடுக்கும்
9 pm - 11 pm
இந்நேரத்தில் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்,மேலும் நாளமில்லா சுரப்பிகளின் பணியை சீராக்கி, தூக்கத்தை வரவழைக்கும். இந்நேரத்தில் தூக்கம் வராமல் இருந்தால் இச்செயல்பாடுகளில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்
11 pm - 1 am பித்தப்பைக்கான நேரம்
இந்நேரத்தில் கல்லீரலிலிருந்து பித்தநீர் சுரக்கப்பட்டு உணவை செரிப்பதற்கு பித்தப்பையை அடையும். இந்நேரத்தில் உடல் மறு உருவாக்கமடையும். இந்த நேரத்திலும் தூக்கம் வராவிட்டால் பித்தப்பையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்ததம்.
Comments
Post a Comment
subscribe Media 1 Television