அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வாசனை மிகுந்த நலங்குமாவு. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவருமே பயன்படுத்தலாம். குறிப்பு: ஆண்கள் பயன்படுத்தும்போது கஸ்தூரி மஞ்சளை தவிர்த்து விட்டு பாசி பயரினை பயன்படுத்தலாம்.
கஸ்தூரி மஞ்சள்- 250கி
பூலாங்கிழங்கு - 100கி
ரோஜாப்பூ - 100கி
ஆவாரம் பூ - 100கி
கார்போக அரிசி - 100கி
மலை நன்னாரி - 100கி
பூஞ்சாந்துபட்டை-100கி
திருமஞ்சனபட்டை - 100கி
செண்பக மொட்டு - 50கி
மரிக்கொழுந்து - 50 கி
மருவு - 50கி
பச்சிலை - 50கி
கல்பாசி - 50கி
அதிமதுரம் - 50கி
கோரை கிழங்கு - 50கி
வெட்டிவேர் - 25கி
வசம்பு - 25கி
லவங்க பத்திரி இலை - 25கி
மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவை அனைத்தையும் வெயில் நன்கு காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த குளியல் பொடி வாசனை மிகுந்தது மட்டுமல்லாமல் உடலில் உள்ள மருக்கள், முகத்தில் காணப்படும் கருவளையம், தோல் நோய்கள், வியர்வை நாற்றம், முகப்பரு, வாயைச் சுற்றியுள்ள கருமைபகுதியை மாற்றி முகம் பிரகாசமாக இருக்கச் செய்யும். இதனை தினமும் பயன்படுத்திவந்தால் சருமத்தில் நல்ல மாற்றத்தினை நீங்களே உணர்வீர்கள்.
இந்த நலங்குமாவினை பேஸ்பேக்காவும் பயன்படுத்தலாம்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தும் முறை: நலங்கு பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்து 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்
மற்ற சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தும் முறை: நலங்கு பொடியுடன் தேன் அல்லது ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்து 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
Comments
Post a Comment
subscribe Media 1 Television