ஓம் என்னும் அற்புதம்

ஓம் ஒரு அற்புதமான மந்திரம். யார் வேண்டுமானாலும் இதை உபயோகிக்கலாம்.இந்த மந்திரம் ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிகுந்த பலனைத் தருபவை. ஓம் எனும் மந்திரம் உடல்நலத்தையும் மனநலத்தையும் காக்க வல்லவை. ஓம் எனும் மந்திரம் உடலிலும் உள்ளத்திலும் பல நல்ல மாற்றங்களை நிகழ்த்தக் கூடியது. ஓம் எனும் மந்திரத்தை முறைப்படி உச்சரிக்கும் போது உடலில் அதிர்வலைகள் தோன்றுகின்றன.



அ உ ம எனும் மூன்று ஒலிகளின் கூட்டுச் சேர்க்கையே ஓம் எனும் மந்திரமாகும். அ உ ம எனும் மூன்று எழுத்துக்களும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் குறிப்பனவாகும், ஓங்காரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் வாயிலாக மரணபயம் நீங்கும். உச்சரிப்பவரின் மனதில் அமைதி தவழும்.

ஓம் மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதை கற்போம். ஓம் மந்திரத்தை பாவமில்லாமல் அப்படியே ஓம் என்று உச்சரித்துப் பாருங்கள். எந்த புதிய அனுபமும் உங்களுக்குக் கிடைக்காது. பத்மாசனத்தில் அமர்ந்து முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி உட்காருங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். ஞான முத்திரையில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண மூச்சை முடிந்தமட்டும் நன்றாக வயிற்றை உள்ளிழுத்து மார்பை விரித்தபடி இழுங்கள். மூச்சை வெளியேற்றம் சமயத்தில் ஒ பின்னர் ம் என்ற எழுத்தை உச்சரியுங்கள். ஓ ஒரு பங்கு ம் இரண்டு பங்கு என்ற அளவில் உச்சரிக்க வேண்டும். உச்சரித்து முடித்ததும் உடலில் ஒரு வித இனிய அதிர்வு தோன்றுவதை நீங்கள் நன்கு உணரலாம். தொடர்ந்து பத்து முறை இவ்வாறு ஓம் மந்திரத்தை உச்சரித்துப் பழகுங்கள்.

தினமும் படுக்கைக்குச் செல்லும் முன்னால் இந்த மந்திரத்தை ஐந்து முறை உச்சரித்த பின்னர் படுத்துப்பாருங்கள். அமைதி மிக்க ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.தூக்கமின்மை காரணமாக அவதிப்படுபவர்களுக்கு இந்த மந்திரம் நல்ல பலனைத் தரும். 

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்