நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கோதுமைப் பால்
கோதுமை: மக்களால் அதிகளவில் உணவாக சாப்பிட பயன்படுத்தப்படும் தானியமாக கோதுமை உள்ளது. கோதுமை முதன் முதலில் தென்மேற்கு ஆசிய பகுதியில் பயிரிடப்பட்டது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முழுமை தானியங்களில் ஒன்றாக கோதுமை தானியமுள்ளது. கோதுமையில் அதிகளவில் வைட்டமின் பி சத்து உள்ளது. இவ்வளவு மகத்துவமான கோதுமையை சமைத்து சாப்பிடுவதை விட பாலாக அருந்தும் போது அதன் சத்துக்கள் முழுவதுமாக நம்மை அடையும். கோதுமை எவ்வாறு சமைக்காமல் சாப்பிட முடியும் என்று உங்களுக்கு தோன்றும். அதனை தெரிந்துக்கொள்ள விரும்பினால் கீழே படியுங்கள். இதனைச் செய்து பார்த்து தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முளை கட்டிய கோதுமை - 100 கிராம்
தேங்காய் பால் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
தேன் - தேவைக்கேற்ப
செய்முறை:
100கிராம் கோதுமையை சுத்தப்படுத்தி முளை கட்டுமாறு ஈரத்துணியில் இட்டு கட்டி வவைக்க வேண்டும். முளைவிட்ட பிறகு தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். இதை வடிகட்டினால் பால் கிடைக்கும். இந்த பாலில் தேங்காய் பாலையும் சேர்த்து தேவைக்கேற்ப தேனிட்டு ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் சேர்த்து கலக்கி பருகலாம்.
பயன்கள்:
நல்ல பலத்தைக் கொடுக்கும். வாதசுரம், மூக்கில் நீர் வடிதலை குணப்படுத்தும். விந்துவை பெருகச் செய்யும், வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்யும். சாதாரண கோதுமையை முளை கட்டச் செய்து, பயன்படுத்தும் போது கிடைக்கும் சத்தின் அளவு பல மடங்கு அதிகரிப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.

Comments
Post a Comment
subscribe Media 1 Television