இதயத்தை பாதுகாக்கும் பொடி


வேர்க்கடலை பூண்டுப்பொடி
தேவையானவை:
வேர்க்கடலை - 1 கப்
பூண்டு - 6 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • வெறும் கடாயில் வேர்க்கடலையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • பூண்டு சீரகத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறிய பின் அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்து 15 நாள்கள் வரை பயன்படுத்திகொள்ளவும்.
பயன்கள்:
  • இருதயத்தை பாதுகாப்பதோடு இதய நோய் வராமலும் இரத்த ஒட்டத்தையும் சீராக்கவும் செய்கிறது.
  • உடல் எடையை குறைய விரும்புவர்கள் நிலக்கடலை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.
  • பித்தப்பை கல் உருவாவதை தடுக்கிறது
  • ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • முளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
  • உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
  • எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  • பெண்களுக்கு மார்பக் கட்டி வராமல் தடுத்து ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது
  • பெண்களுக்கு எலும்புத் துளை நோய் வராமல் பாதுகாக்கிறது

For More Interesting things Click the links

Comments

Popular posts from this blog

காய்கறிகளை எவ்வாறு தரமாக வாங்குவது?

மொறு மொறு பக்கோடா

என்ன சமையல் செய்வது என்று யோசனையா?