வைட்டமின் சி சத்து நிறைந்த பச்சடி

மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:
மாங்காய் - 2
பச்சை மிளகாய் - 4
வெல்லம் - 1/4 கப்
தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:
  • முதலில் மாங்காயை கழுவி  தோல் நீக்கி  பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும், தேங்காயை துருவிக் கொள்ளவும்
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து கொள்ளவும்
  • பிறகு பச்சை மிளகாய் மற்றும் மாங்காய்களைச் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
  • அதன் பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  • மாங்காய் நன்கு வெந்ததும் வெல்லம், தேங்காய் சேர்த்து கலக்கவும். 
  • அட்டகாசமான மாங்காய் பச்சடி தயார். சாதம் மற்றும் தயிர் சாதம் சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
மாங்காயின் பயன்கள்:
  • புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் சி சத்து மாங்காயில் இருப்பதால் அணுக்களின் உற்பத்திக்கு உதவி செய்கிறது
  • இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் பலமாக மாங்காய் உதவுகிறது
  • நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடச் செய்கிறது
  • முதுமை தோற்றம் வராமல் தடுத்து சருமத்தை பளபளப்புடன் இருக்கச் செய்கிறது
மாங்காய் யாரெல்லாம் சாப்பிட கூடாது?
  • சூட்டை அதிகரிக்கும் தன்மை மாங்காயிலிருப்பதால் வயிற்றுவலி உள்ளவர்கள் மற்றும் சரும நோய் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
வெல்லத்தின் பயன்கள்:
  • வெல்லம் உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்ய வல்லது.
  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெல்லம் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுகளை சரி செய்துவிடும்.
  • அதிகாலையில் வெல்லத்தை சிறிது சாப்பிடுவதால் உடம்பிலுள்ள குடல் புழுக்களை கட்டுப்படுத்தப்படும்
  • உடல் சோர்வு, தலைச்சுற்றல் இருக்கும் போது வெல்லம் சாப்பிட்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.




For More Interesting things Click the links



Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்