நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் அருமையான உணவு
சிகப்பு அரிசி ராகி புட்டு
தேவையான பொருட்கள்:
சிகப்பு அரிசு மாவு - 1/2 கப்
ராகி (அ) - 1/2 கப் கேப்பை
துருவிய தேங்காய் - 1/4 கப்
பொடித்த வெல்லம் - 1/4 கப் அல்லது 1/2 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 1/2 டம்ளர்
ராகி (அ) - 1/2 கப் கேப்பை
துருவிய தேங்காய் - 1/4 கப்
பொடித்த வெல்லம் - 1/4 கப் அல்லது 1/2 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 1/2 டம்ளர்
- முதலில் சிகப்பு அரிசி மாவு மற்றும் ராகி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்
- வெறும் கடாயில் சிகப்பு அரிசி மற்றும் ராகி மாவு கலவையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
- பின்னர் இந்த மாவு கலவை ஆறியதும் அதில் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
- மாவை பிசைந்த பின் கொழுக்கட்டை பிடித்தால் பிடிக்க வர வேண்டும், உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதுதான் மாவின் பதமாகும்.
- இப்பொழுது சூடான இட்லி பாத்திரத்தில் புட்டு மாவை வேக வைக்கவும். சுமார் 15 லிருந்து 20 நிமிடங்களில் புட்டு வெந்து விடும்.
- அதன் பின்னர் புட்டில் துருவிய தேங்காய் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
- சுவையான சத்து நிறைந்த வாசனையான சிகப்பு அரிசி ராகி புட்டு தயார்.
சிகப்பு அரிசி
- சிவப்பு அரிசியில் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதால் இருதய ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது
- டைப் 2 சர்க்கரை நோயைக் குறைக்கும்.
- வாய்ப்புண்ணை குணமாக்குகிறது.
- நம் உடலிருக்கும் லோ டென்சிட்டி லிப்போபுரோட்டின் என்கிற கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- உயர் ரத்த அழுத்த்தைக்குறைக்க உதவுகிறது
- மாரப்படைப்பு வராமல் தடுக்கிறது
- பக்கவாதம் வாராமல் தடுக்கிறது
- பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காக்கிறது
- மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது
- ஆஸ்துமாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துகிறது.
- மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும்
ராகி:
- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
- மன அழுத்தத்திலிருந்தும் விடுபட உதவுகிறது
- இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்ய உதவும் இரும்புச் சத்து அதிகளவிலிருப்பதால் ரத்த சோகையை வராமல் தடுக்கிறது.
- கால்சியம், வைட்டமின் டி அதிகளவில் இருப்பதால் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
- இரத்ததில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு ரத்த அழுத்த்ததையும் சீராக வைக்க உதவுகிறது.
- லெசிதின் மற்றும் மெத்தியோனைன் அதிகளவிலிருப்பதால் கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.
- ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.
- பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வதால் பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கச் செய்கிறது.
- செரிமான பிரச்சனையிலிருந்து விடுபட செய்கிறது.
For More Interesting things Click the links
Comments
Post a Comment
subscribe Media 1 Television