மூட்டு வலிக்கு அருமையான மருந்து?
முட்டைகோஸ் :
உடல் நலனில் அக்கறை கொண்டுள்ள பலருக்கும் இந்த பதிப்பு மிகவும் பயனுள்ளளதாக இருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதன்படி நாம் இன்று பார்க்கப் போகும் காய் முட்டைக்கோஸ். இது கீரை வகையைச் சேர்ந்தது. முட்டைக்கோஸை நாம் சமைத்து சாப்பிடுவதைவிட சமைக்காமல் சாப்பிட்டால் அதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள் நன்மை வந்தடையும். மூட்டு வலியால் அவதிபடுபவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்.முட்டைகோஸ் துவரன்:
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 2 கப்
சீரக பொடி - 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி / 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
இந்துப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
- முட்டைகோஸை நன்றாக கழுவி துருவிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- இத்துடன் மற்ற பொருட்களையும் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு நன்கு கிளறிக் கொள்ளவும்.
- சுவைக்கு ஏற்ப இந்துப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- அற்புதமான முட்டைகோஸ் துவரன் தயார்.
பயன்கள்:
மூட்டு வலிகள் மறைகிறது. உடலுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கிறது. வேக வைத்த முட்டைக்கோஸ் வாயுவை விருத்தி செய்யும். ஆனால், பச்சை முட்டைகோஸ் அவ்விதம் செய்வதில்லை. குடல் அழுக்கையும், கொழுப்பையும் அகற்றுகிறது.

Comments
Post a Comment
subscribe Media 1 Television