சுலபமாக வீட்டிலேயே செய்யக் கூடிய அல்வா
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 1/4 கப்
கேரமல் செய்வதற்கு:
சர்க்கரை - 1/4 கப்
செய்முறை:
- முதலில் ரவையை இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஊற வைக்கவும்
- பின்னர் நன்கு ஊறிய ரவையை கையால் நன்கு கலந்து வெள்ளை துணியில் வடிகட்டி பாலை எடுத்துக் கொள்ளவும்.
- வடிகட்டி வரும் பாலில் பாதி அளவிற்கு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்
- கடாயில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து கரைய விடவும். நன்றாக கரைந்து அடர் சிகப்பு நிறம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த கலவை தான் அல்வாவிற்கு நிறத்தை தரும்.
- மற்றொரு கடாயில் நெய் சேர்த்து முந்திரிபருப்பை வறுத்துக் கொள்ளவும்
- அதன் பிறகு 1/2 கப் சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
- பின்னர் வடிகட்டிய பாலை சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
- இப்பொழுது கேரமல் சர்க்கரையை இதில் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
- நெய் சேர்த்து சேர்த்து நன்கு பிரட்டி விட்டு கிளறவும்.
- அல்வா பதம் வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
- சுவையான சூடான அல்வா ரெடி.
SUBSCRIBE http://www.youtube.com/c/LeesKitchen இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் LEES KITCHEN சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி... நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள். தொடர்பு கொள்ள : LEES KITCHEN : 8883543999
**** For More Interesting things Click the links ****
Youtube: http://www.youtube.com/c/LeesKitchen
Comments
Post a Comment
subscribe Media 1 Television