உடலின் அடிப்படை தத்துவங்கள்: கபம்
உயிர்த்தாதுக்கள்:
வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது.
கபம்:
உடலுக்கு வலிமை, மூட்டுகளுக்கு வலிமை, தோலுக்கு பளபளப்பு, கண்ணுக்கு குளிர்ச்சி, தோல், மலம், சிறுநீருக்கு நிறம் தருதல், உடலுக்கு மென்மை, வளமை, பொறுமை தருதல், நாவுக்கு இனிப்புச் சுவை தோன்றல் போன்ற செயல்களைப் புரிகிறது
கபம் தன்னிலையில் இருந்து மாறி நோய் நிலையில், உடல் குளிர்தல், அரிப்பு, மந்தம், உடல் பாரமாக இருத்தல், உடல் எண்ணெய்ப் பசையாக இருத்தல், உணர்விழப்பு, நாவில் அதிக இனிப்பு, சுவை காணுதல், தொழில் செய்ய உற்சாகமின்மை, பசியின்மை, உமிழ்நீர் சுரப்பு அதிகரித்தல், இருமல், மேல் மூச்சு, அதிக தூக்கம், தலைச்சுற்றல், தோல் வறட்சி, நெஞ்சு படபடப்பு ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன
கப தேகிகளின் உடலமைப்பு:
கப தேகிகளின் நடைமுறைகள்:

- வட்டமான, முக உறுப்புகள் மூக்கு, கண், உதடு, நெற்றி, புருவம் போன்றவை தெளிவாகத் தெரியக்கூடிய அழகிய முக அமைப்பு இருக்கும்
- வெண்மை, வெண்மை கலந்த மஞ்சள் நிறம் இருக்கும்
- தெளிவான, நிலையான உடல் இயக்கம் இருக்கும்
- உடல் எடை இயல்பான எடையை விட கூடுதலாக இருக்கும்
- அதிக உடல் சதையும், பெரிய உடம்பும், உயரம் குறைவாகவும் இருப்பார்கள்
- தோல் மென்மையாகவும், அதிக எண்ணெய்ப் பசையை உடையதாகவும், வழவழப்பாகவும் இருக்கும்
- அதிக எண்ணெய் பசையுடைய தோல் இருக்கும்
- உடல் வெப்பம் குறைவாகவும், உடல் குளிர்ச்சியாகவும், கைகள், கால்கள் அதிக குளிர்ச்சியாகவும் இருக்கும்
- அதிக பலமும், அதிக நேரம் உழைக்கும் ஆற்றலும் உடையவர்கள்
- பெரிய அழகான கண்களும், அடர்ந்த புருவமும் பெற்றிருப்பார்கள்
- தலைமுடி அடர்த்தியாக இருக்கும்
- பெரிய, தடித்த, வழவழப்பான எண்ணெய் பசையுடன் கூடிய வெண்மையான உதடு இருக்கும்
- மிதமான, நீளமுள்ள அல்லது குட்டையான அழகான விரல்கள் இருக்கும்
- நீளமான, தடித்த, வழவழப்பான, பளபளப்புடைய நகங்கள் இருக்கும்
- நாக்கு இளஞ்சிவப்பு நிறத்துடன் வெளுத்து, தடித்து, வழவழப்புடன் இருக்கும்
கப தேகிகளின் நடைமுறைகள்:
- செயல்கள் : மெதுவாக இருக்கும்
- மனநிலை : மெதுவான மாற்றம் அல்லது நிலையாக இருக்கும்
- புரிதல் : மெதுவாக இருக்கும்
- அறிவு : நிலையான ஆனால் மந்தமாக இருக்கும்
- செரிமானம் : மிதமாகவும் மெதுவாகவும் இருக்கும்
- பசி வேகம் : மிதமான பசி சாப்பிடாமல் இருக்க முடியும்
- விருப்பமான சுவைகள் : கசப்பு, துவர்ப்பு, காரம்
- விருப்பமான உணவு : வெதுவெதுப்பான வறட்சியான உணவுகள்
- காம இச்சை : அதிகம்
- பேச்சுத்திறமை : இனிமையான, மெதுவான, தெளிவான பேச்சாற்றல்
Youtube: http://www.youtube.com/c/LeesKitchen
Comments
Post a Comment
subscribe Media 1 Television