இஞ்சியும் மெலனேஷியன் தீவும்
- இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன் ஆகியனவும் மாவுச்சத்தும் புரோட்டீனும் நிறைய உண்டு. இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன.
- வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை இரண்டாயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
- சீனர்கள், சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர் மேற்கிந்தியத் தீவுவாசிகள்.
- இஞ்சி, இச்சையைத் தூண்டும் போக மருந்து என சான்றிதழ் தருகிறது காமசூத்திரம். பசிபிக் கடலில் இருக்கும் மெலனேஷியன் தீவில் ஆண்கள் எல்லாரும் இஞ்சியை ஏராளமாக சாப்பிடுகிறார்கள். இதைச் சாப்பிடும் ஆண்களிடம் பெண்கள் சுலபமாக மயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம்.
- எட்டாம் ஹென்றியின் ஆட்சிக்காலத்தில் லண்டன் மாநகரில் பிளேக் நோய் வேகமாகப் பரவிப் பீதியூட்டியது. பிளேக்கை சமாளிக்க இஞ்சியைப் பயன்படுத்துமாறு மாநகர மேயருக்கு மன்னர் உத்தரவிட்டார். சாப்பிட்டதும் உடலில் சூட்டைப் பரப்பி, வியர்க்க வைக்கும் தன்மை கொண்டது இஞ்சி. வியர்த்ததும் ஜூரம் விட்டுவிடும் என்ற நம்பிக்கை, எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறதே... அதனால், ஜூரத்தின் ஆரம்ப கட்டத்தில் இஞ்சியை உட்கொண்டால் ஜூரம் உக்கிரகத்தைக் காட்டாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
- மூட்டுவலிக்கு இஞ்சி சிறந்த மருந்து என நவீன மருத்துவமே ஒப்புக் கொண்டிருக்கிறது. 261 மூட்டுவலி நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தினமும் இரண்டு வேளை சில சொட்டுகள் இஞ்சிச் சாறு உட்கொள்ளும் நோயாளிகளுக்கு மூட்டு வலியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைத்ததாம்.
- வாந்தியை சமாளிக்கும் ஆற்றலையும் தரவல்லது இஞ்சி. கருவைச் சுமக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கும் பெண்களில் முக்கால்வாசி பேருக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் இனிமையான அவஸ்தை, கர்ப்பம் என்றால் காலையில் தூங்கி எழுந்ததும் குமட்டிக் கொண்டு வரும் வாந்திதான் அவஸ்தைக்குக் காரணம். இஞ்சி வாந்தியை தடுக்கும் தன்மை வாய்ந்தது.
**** For More Interesting things Click the links ****
Comments
Post a Comment
subscribe Media 1 Television