வாழைப்பழ பணியாரம் | Banana Paniyaram | Leela Tamil Kitchen
Banana Paniyaram |
பழுத்த வாழைப்பழம் - 1
சர்க்கரை -3 மேசைக்கரண்டி
கோதுமை மாவு - 1/2 கப்
மைதா மாவு - 1/2 கப்
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் வாழைப்பழம் மற்றும் சர்க்கரையை மிக்ஸியில் அரைக்கவும்.
- பின்னர் அதில் கோதுமைமாவு மற்றும் மைதா மாவு சேர்த்து அரைக்கவும்.
- கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அதில் உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- ஒரு பவுலில் அரைத்தவற்றை மிக்ஸியிலிருந்து எடுத்து அரை மணி நேரம் ஊற விடவும்.
- அதன் பிறகு குழி பணியார கடாயில் எண்ணெய் ஊற்றி பாதி அளவிற்கு மாவை ஊற்றி இருபுறமும் வேக விடவும்.
- சூடான சுவையான வாழைப்பழ பனியாரம் ரெடி.
**** For More Interesting things Click the links ****
Youtube: http://www.youtube.com/c/LeesKitchen
Comments
Post a Comment
subscribe Media 1 Television