எக் சில்லி ஃப்ரை



தேவையானவை:
வேக வைத்த முட்டை - 4
கார்ன்ஃப்ளார் - 3 டீஸ்பூன்
மைதா - 3 டீஸ்பூன்
கஸ்தூரிமேத்தி - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது
குடை மிளகாய் - 2 டீஸ்பூன் சதுரங்களாக நறுக்கியது
வெங்காயம் - 3 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • முட்டையை வேக வைத்து தோல் நீக்கி நான்காக நறுக்கவும்.
  • கார்ன்ஃப்ளார் மைதா கஸ்தூரிமேத்தி மிளகாய்தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். 
  • கடாயில் எண்ணெயைக் காய வைத்து முட்டையை அந்த மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
  • கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் குடைமிளகாய் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும். 
  • இப்போது பொரித்து வைத்த முட்டை துண்டுகளையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
  • சுவையான எக் சில்லி ஃப்ரை தயார்.
  • இதுவே கிரேவியாக வர 2டீஸ்பூன் தக்காளி சாஸ் 1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு கரைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.


For More Interesting things Click the links

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்