ஜலதோஷத்திற்கு சிறந்த நிவாரணி

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம் 
எலுமிச்சம் பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் 

என்பது காவடி சிந்து பாடல். இஞ்சிக்கு எரிப்பு சக்தி இருப்பதால் கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கச் செய்துவிடும். வாயில் சுரக்கும் உமிழ்நீரை அதிகரிக்கச் செய்து பசியை தூண்டிவிடுகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் பொருள்கள் பயனுள்ளதா என்று பார்க்காமல் ருசிக்காக நாம் எதைஎதையோ சாப்பிடுகிறோம். இதனால் உடலில் பல வித கோளாறுகள் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து விடுபட நாம் பல வித மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறோம். ஆனால் நம் இயற்கையில் கிடைக்கும் பொருள்களை கொண்டு நம் உடலில் உள்ள உபாதைகளை எளிதில் குணமடைய செய்து விடலாம். அவ்வாறான ஒரு உணவை தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.
இஞ்சிப் பச்சடி:
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 50 கிராம்
எலுமிச்சை - 100 கிராம்
இந்துப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் இஞ்சியை தோல் நீக்கி  நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கக் கொள்ளவும். சுவையான இஞ்சிப் பச்சடி தயார்

பயன்கள்:
பித்தம், ஜலதோஷம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. நல்ல பசி ஏற்பட செய்கிறது. முத்தோஷங்களையும் முறியடிக்கிறது

Comments

Popular posts from this blog

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

காய்கறிகளை எவ்வாறு தரமாக வாங்குவது?

பட்டுப் புடவையை பராமரிப்பது எவ்வாறு?