உடலின் அடிப்படை தத்துவங்கள்: வாதம்

உயிர்த்தாதுக்கள்:
வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது.

வாதம்:
இது உடலுக்கு ஊக்கம் உண்டாக்கல், மூச்சு விடல், மூச்சு வாங்கல், மனம், மொழி, மெய்களுக்கு செயல் தருதல், சிந்தனை செய்தல், உடல் தாதுக்களுக்கு அணிச்சைச் செயல் தருதல், தொழில் செய்யும் முனபை்பைத் தருதல், மலம், சிறுநீர், விந்து, நாதம், இவற்றை வெளியேற்றுதல், கண்களுக்கு ஒளி தருதல், கண், காது, நாக்கு, மூக்கு, தோல் போன்ற ஐம்பொறிகளுக்கு வன்மை தருதல் போன்ற செயல்களைப் புரிகிறது.

வாதம் தன்னிலையிலிருந்து மாறி நோய் நிலையை அடைந்தால், உடலில் வலி, உடல் உறுப்புகள் செயல் இழத்தல், தசைவலி, தசை மெலிவு, மூட்டுவலி, மூட்டு நழுவல், தோல் வறட்சி, மலச்சிக்கல், நீர் சுருக்கு, வயிறு உப்புசம், உடல் சோர்வு, தூக்கமின்மை, மயக்கம் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.

வாத தேகிகளின் உடலமைப்பு:
  • மெல்லிய எலும்புகள், நன்றாகத் தெரியக்கூடிய நீண்ட முகமிருக்கும்
  • கறுப்பு அல்லது மரத்தைப் போன்ற நிறமிருக்கும்
  • லேசான நடுக்கத்துடன் கூடிய உடல் இயக்கமிருக்கும்
  • லேசான, இயல்பாக இருக்க வேண்டிய உடல் எடைக்கும் குறைவாக இருக்கும்
  • மெல்லி, மிக உயரமான அல்லது உயரம் குறைந்த உடலமைப்பு இருக்கலாம்
  • தோல், வறண்ட, தடிப்பான, மிக நுண்ணிய வெடிப்புகள் உடையதாக இருக்கும்
  • வறட்சியான தோலிருக்கும்
  • இயல்பாகவே உடல் வெப்பம் குறைந்தும், கைகள், கால்கள் குளிர்ச்சியாகவும் இருக்கும்
  • எளிதில் சோர்வடையக் கூடியவர்கள்
  • கண்கள் சிறியதாக இருக்கும். சிறிய மெல்லிய இமையும், இமையில் முடி குறைவாகவும் இருக்கும்
  • தலைமுடி குறைவாக இருக்கும்
  • வறட்சியான, அடர்ந்த நிறமுடைய, சிறிய வெடிப்புகளுடன் கூடிய உதடு இருக்கும்
  • நீண்ட,  தடித்த விரல்கள் இருக்கும்
  • குட்டையான, வறட்சியான, பளபளப்பு இல்லாத நகங்கள் இருக்கும்
  • நாக்கு, அடர்ந்த நிறத்துடன், தடித்து, வெடிப்புடன் இருக்கும். 
வாத தேகிகளின் நடைமுறைகள்:
  1. செயல்கள் : அதிக வேகமாக இருக்கும்
  2. மனநிலை : எளிதில் மாறுபடும்
  3. புரிதல் : வேகமாக இருக்கும்
  4. அறிவு : விரைவாகச் சிந்திக்கும் தன்மை, அதிக கற்பனை
  5. செரிமானம் : அதிகமாகவும் குறைவாகவும் மாறி, மாறி இருக்கும்
  6. பசி வேகம் : மாறிக் கொண்டே இருக்கும்
  7. விருப்பமான சுவைகள் : இனிப்பு, புளிப்பு, உப்பு
  8. விருப்பமான உணவு : வெது வெதுப்பான ஈரத்தன்மையுடைய உணவுகள்
  9. காம இச்சை : குறைவு
  10. பேச்சுத்திறமை : தடுமாற்றப் பேச்சாற்றல்

பித்த தேகிகளை பற்றி அடுத்த போஸ்டில் பார்ப்போம்


**** For More Interesting things Click the links ****





Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்