என்றும் 16 ஆக வாழ வேண்டுமா?

காளான் புரதச் சத்து நிறைந்தது. இது இயற்கையாக மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவரமாகும். பல நாடுகளில் காளான் உணவுப் பொருளாக பயன்படுகிறது.
காளான் புலாவ்:
தேவையான பொருட்கள்:
வேக வைத்த சாதம் - 1 கப்
காளான் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பேரீச்சம் பழம் - 4 to 5
கிஸ்மிஸ் - 4 to 5
எண்ணெய் - 4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
முதலில் காளானை நன்கு கழுவி பின் நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் காளானை சேர்த்து வேக விடவும், காளானில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டாம்
காளான் வெந்தவுடன் கிஸ்மிஸ் நறுக்கிய பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து வேக வைத்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
சுவையான காளான் புலாவ் தயார்.

பயன்கள்:
உடலியில் மனஅழுத்தத்ததை குறைத்து இளமையுடன் இருக்கச் செய்கிறது
நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது
இதயத்தை பலப்படுத்தி நல்ல ஆரோக்கியத்துடன் செல்பட உதவுகிறது.
எலும்புகளுக்கு வலுவூட்டுவதோடு உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு தேவையற்ற கொழுப்புகளை இரத்தத்திலிருந்து பிரித்து உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பி உடலில் கொழுப்பு  சேராமல் பாதுகாக்கிறது.



Comments

Popular posts from this blog

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

கோகுலாஷ்டமி ஸ்பேஷல் இனிப்புச் சீடை

இஞ்சியும் மெலனேஷியன் தீவும்