இளமையோடு இருக்கச் செய்யும் சூப்

பேபிகார்ன் சூப்:
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 200 கிராம்
தக்காளி - 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 4 டேபிள்ஸ்பூன்
பால் - 300 மில்லி
தண்ணீர் - 750 மில்லி
மிளகுத் தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

  • நன்கு சுத்தம் செய்த பேபிகார்ன், தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
  • காய்கறிகளை வேகும் வரை வதக்கி மசித்து வடிகட்டவும்
  • பால் மற்றும்  சோளமாவு சேர்த்து வெள்ளைச்சாஸ் செய்யவும்
  • இத்துடன் வடிகட்டிய காய்கறி கூழ் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்

குறிப்பு:
பேபிகார்ன்க்கு பதில் காளான் / தக்காளி / பட்டாணி / கீரை / பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த பல வகையான சூப் தயாரிக்கலாம்.

பயன்கள்:

  • சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது.
  • முதுமையினால் ஏற்படும் எலும்பு முறிந்து போவதை தவிர்க்கின்றன
  • பேபிகார்னில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை விரட்டுகிறது
  • இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது
  • இரத்தசோகை ஏற்படுவதை தடுக்கிறது
  • சருமங்களை இளமையோடு இருக்க உதவுகிறது
  • பேபிகார்னில் ஃபோலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.
**** For More Interesting things Click the links ****


Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்