உடலின் அடிப்படை தத்துவங்கள்: பித்தம்
உயிர்த்தாதுக்கள்:
வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது.
பித்தம்:
உடலுக்கு வெப்பத்தைத் தருதல், உணவைச் செரித்தல், தோலுக்கு நிறத்தையும் பளபளப்பையும், பார்வை தருதல் போன்ற செயல்களபை் புரிகிறது.
பித்தம் தன்னிலையிலிருந்து மாறி நோய் நிலையை அடைந்தால் மலம், சிறுநீர், தோல் போன்றவை மஞ்சள் நிறமடைதல், அதிக பசி அல்லது பசியின்மை, உடல் கண் எரிச்சல், அதிக வியர்வை, தோல் சிவத்தல், நாவறட்சி, தாகம், புண்கள், கட்டிகள் தோன்றல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
பித்த தேகிகளின் உடலமைப்பு:
பித்த தேகிகளின் நடைமுறைகள்:
கப தேகிகளை பற்றி அடுத்த போஸ்டில் பார்ப்போம்
**** For More Interesting things Click the links ****

- நீள்வட்ட தாடைகள் நன்றாக வளைந்து, தெளிவாகத் தெரியும்படியான தெளிவான முக அமைப்பு இருக்கும்
- செம்பு போன்ற மஞ்சள் நிறம் இருக்கும்
- தெளிவான நிலையான உடல் இயக்கம் இருக்கும்
- மிதமான உடல் எடை இருக்கும்
- மிதமான உடல் அமைப்பும், உயரமும் இருக்கும்
- பித்த உடம்பினருடைய தோல், மென்மையான நெய்ப்புத் தன்மையும், வறட்சியும் இல்லாத மிதமான, எளிதில் பாதிப்படையக்கூடிய மச்சங்களை அதிகமாகப் பெற்று இருக்கும்
- பித்த உடம்பை பெற்றவர்களுக்கு, உடல் வெப்பம் அதிகமாகவும், கைகள், கால்கள் வெதுவெதுப்பாகவும் இருக்கும்
- உடல் வெப்பம் குறைவாகவும், உடல் குளிர்ச்சியாகவும், கைகள், கால்கள் அதிக குளிர்ச்சியாகவும் இருக்கும்
- ஊடுருவக்கூடிய பார்வையும், மெல்லிய செம்மை கலந்த கறுப்பு நிற இமை மூடியும், புருவமும் பெற்றிருப்பார்கள்
- மென்மையான, தாமிர நிறமும், இளஞ்சிவப்பு நிறமும் கொண்ட உதடுகள் இருக்கும்.
- மிதமான நீளமுடைய மெல்லிய விரல்கள் இருக்கும்
- தாமிர அல்லது இளஞ்சிவப்பு நகங்கள் இருக்கும்
- பித்த உடம்பினரின் நாக்கு, அடர்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்துடன், நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கும்
பித்த தேகிகளின் நடைமுறைகள்:
- செயல்கள் : மித வேகம்
- மனநிலை : மிதமான மாற்றம் இருக்கும்
- புரிதல் : மிதமாக இருக்கும்
- அறிவு : கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமும் இருக்கும்
- செரிமானம் : நிலையாக இருக்கும்
- பசி வேகம் : அதிக பசி சாப்பிடாமல் இருக்க முடியாது
- விருப்பமான சுவைகள் : இனிப்பு, கசப்பு துவர்ப்பு
- விருப்பமான உணவு : குளிர்ச்சியான உணவுகள்
- காம இச்சை : மிதம்
- பேச்சுத்திறமை : வேகமான பேச்சாற்றல்
கப தேகிகளை பற்றி அடுத்த போஸ்டில் பார்ப்போம்
**** For More Interesting things Click the links ****
Youtube: http://www.youtube.com/c/LeesKitchen
Comments
Post a Comment
subscribe Media 1 Television