சர்க்கரை வியாதிக்கு சூப்பர் மருந்து

கோவக்காய் மசாலா புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வத்தல் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து

வறுத்து அரைக்க:
வத்தல் - 2
மல்லி - 1 மேசைக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு  - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டுக்கடலை - 1/2 மேசைக்கரண்டி

செய்முறை:
கோவக்காயை நன்கு கழுவி வெட்டி வைத்துக் கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சோ்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய  சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். மற்றொரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கோவக்காயை தனியாக வதக்கி அதனுடன் சேர்க்கவும். காய் பாதி வெந்ததும் அரைத்தவற்றை சேர்த்து கிளறவும். பின்னர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். காய் வெந்ததும் புளிக் கரைசலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடான சுவையான கோவக்காய் மசாலா குழம்பு தயார்.

பயன்கள்:
  • வாய்ப்புண் குணமாக கோவக்காயை உணவில் வாரம் இருமுறை சேர்த்துக் கொண்டால் நல்ல பலனை அளிக்கும்.
  • கோவக்காயில் இரும்புசத்து அதிகமுள்ளதால் உடல் சோர்வை நீக்கி உடலுக்கு வலுமையை அளிக்கிறது
  • சீறுநீரக கோளாறுகள் மற்றும் சீறுநீரக கற்களை கரைக்கும் தன்மை இக்காயில் உள்ளது
  • செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது
  • உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலனை பெறலாம்
  • நீரிழிவு நோய் கோவக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் தடுக்க உதவுகிறது.
  • பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுசக்களையும் வெளியேற்ற உதவுகிறது.
  • கோவக்காயில் இருக்கும் பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கச் செய்கிறது.
  • கல்லீரலில் இருக்கும் கிருமிகளை நீக்கி கல்லீரலில் வீக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.






Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்