EGG WHITE CURRY

தேவையான பொருட்கள்: வேக வைத்த முட்டை - 4 பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பருப்பு - 10 -15 தாளிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் நெய் - 2 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை - 1 பட்டை - 2 துண்டு கிராம்பு - 3 ஏலக்காய் - 2 செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்து அங்காங்கே கீறிக் கொள்ளவும். தேங்காய் மற்றும் தோலுரித்து பாதாம் பருப்பை நன்கு விழுதாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறாமல் நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இப்பொழுது தேங்காய் மற்றும் பாதாம் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி முட்டைகளை சேர்க்கவும். மிகவும் சுவையா எக் மசாலா கிரேவி தயார்.

Comments

Popular posts from this blog

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

கோகுலாஷ்டமி ஸ்பேஷல் இனிப்புச் சீடை

இஞ்சியும் மெலனேஷியன் தீவும்