சத்தான பாசிப்பயறு கிச்சடி | Healthy Moong dal Recipe | Delicious Gujarati Khichdi Kadhi

சத்தான பாசிப்பயறு கிச்சடி
தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப் பயத்தம்பருப்பு - 3/4 கப் பெரிய வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 3 தக்காளி - 2 தாளிக்க நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 செய்முறை கடாயில் பாசி பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியதும் கழுவிய பச்சரிசி சேர்க்கவும். அதன் பின்னர் வறுத்து கழுவிய பாசி பருப்பை சேர்த்து நன்கு குழைய வேக விடவும். இப்பொழுது சுவையான சத்துநிறைந்த பாசிப்பயறு கிச்சடி தயார். குழந்தைகளுக்கு ஏற்றது.

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்