ஹோம் மேட் ப்ளாக் பராஸ்ட் கேக் || Home Made Black Forest Cake
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கப் ( - 2 டேபிள் ஸ்பூன்)
கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
முட்டை - 2
உப்பு - 1/8 டீஸ்பூன்
பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 1/2 கப்
வென்னிலா எசன்ஸ - 1/2 டீஸ்பூன்
ரீபைன்ட் ஆயில் - 1/4 கப்
அலங்கரிக்க:
விப்பிங் கீரிம் - 3/4 கப்
டார்க் சாக்லேட்
செர்ரி
- ஓவன் என்றால் முதலில் 180 டிகிரி செல்சியஸ் 10 நிமிடம் ப்ரி ஹீட் செய்ய வேண்டும்
- கேஸ் ஸ்டவ் என்றால் அடிகனமான பாத்திரத்தில் உப்பை பரப்பி அதன் மீது ஒரு ஓட்டை போட்ட தட்டு வைத்து 20 நிமிடம் முன்கூட்டியே சூடுபடுத்த வேண்டும்.
விப்பீங் கீரிம் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு நுரைக்க அடிக்க வேண்டும். விப்பீங் கீரிம்மை பீட் செய்யும் பவுலை நன்கு ப்ரிசரீல் வைத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும் இல்லை யென்றால் பீட் செய்யும் போது கீரிம் உருகிவிடும்.
( முதலில் அரை கப் மைதாவில் 2 டேபிள் ஸ்பூன் மைதாவை எடுத்து விட்டு அதே அளவிற்கு அதாவது 2 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.)
- ஒரு மிக்ஸிங் பவுலில் மைதா, கோக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கட்டியில்லாமல் மூன்று முறை நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவையும் மற்றொரு பவுலில் முட்டையின் மஞ்சள் கருவையும் தனித்தனியாக பிரித்து கொள்ளவும். (இந்த பவுல்களில் ஒரு துளி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்)
- வெள்ளை கருவுடன் உப்பு சேர்த்து எலக்ட்ரீக் பீட்டர் கொண்டு நன்கு நுரைக்க அடிக்க வேண்டும். பவுலை தலைகீழாக திருப்பினால் கீழே விழாமல் இருக்க வேண்டும். அந்தளவிற்கு பீட் செய்ய வேண்டும். பின்னர் பீட் செய்வதை நிறுத்திவிடவும்.
- அதன் பிறகு முட்டையின் மஞ்சள் கருவில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு அடிக்க வேண்டும். அடித்துக் கொண்டே பொடித்த சர்க்கரையை சேர்த்து பீட் செய்ய வேண்டும். வெளிறிய மஞ்சள் நிறம் வரும் போது ரீபைன்ட் ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும். இதன் பின் எலக்ட்ரீக் பீட்டர் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
- இப்பொழுது சலித்த மாவு மற்றும் நுரை பொங்க அடித்த வெள்ளை கரு இரண்டையும் மஞ்சள்கரு மற்றும் சர்க்கரை கலவையில் சேர்த்து கட் அண்ட் போல்ட் மெத்தடில் ஸ்பேட்டூலா கொண்டு எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
- கேக் மோல்டில் எண்ணெய்யை தடவி வைத்துக் கொள்ளவும். கேக் மோல்டில் கலவையைச் சேர்த்து விட்டு இரண்டு முறை கேக் மோல்டை தட்ட வேண்டும் ஏனென்றால் கேக் கலவையில் பபுள்ஸ் இருக்கும். ஓவனில் 30 முதல் 35 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- ஓவனிலிருந்து கேக்கை எடுத்து நன்கு ஆற விடவும். பின்னர் இரண்டு அடுக்குகளாக வெட்டவும்.
- 4 டேபுள் ஸ்பூன் சூடு தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- கேக்கில் இந்த சர்க்கரை தண்ணீரை சேர்த்து கேக் கொஞ்சம் ஈரபடுத்த வேண்டும். பின்னர் அதன் மீது விப்பிங் கீரிம் தடவவும். மேலே செர்ரி பழங்களை ஆங்காங்கே வைக்கவும்.
- பின்னர் அடுத்த லேயர் கேக்கிலும் மேலே கூறியுள்ள முறையை பயன்படுத்தி விப்பிங் கீரிம் மற்றும் செர்ரி பழங்களை சேர்க்கவும்.
- கேக் முழுவதும் விப்பிங் கீரிம் சேர்த்து விட்டு செர்ரி பழங்கள் மற்றும் துருவிய சாக்லேட் கொண்டு அலங்கரிக்கவும். சுவையான ப்ளாக் பாரஸ்ட் கேக் தயார்.
- இந்த கேக்கை செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும். பேக்கரியில் வாங்கிய கேக் போலவே இருக்கும். எனவே செய்து பாருங்கள்.
For More Interesting things Click the links
Comments
Post a Comment
subscribe Media 1 Television