பன்னீர் சப்ஜி | Paneer Sabji | Paneer Gravy Masala Recipe | Lees Kitchen


தேவையான பொருட்கள்:
பன்னீர் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 4 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் காஷ்மிரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 2
உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லி தழை - சிறிது செய்முறை:
  • பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் தனிதனியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டிய பன்னீரை பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
  • கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதன் பின்னர் பொரித்த பன்னீரை சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.
  • சுவையான பன்னீர் சப்ஜி தயார்.
பயன்கள்:
  • பன்னீரில் பாஸ்பரஸ், புரதச்சத்து, கொழுப்பு சத்து அதிகமாகவுள்ளது
  • எலும்புத் தேய்மானம். மூட்டுவலி, பல்வலி போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்
  • பன்னீரை காலையில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். இரவு நேரங்களில் சாப்பிடுவதால் நன்கு தூக்கம் வரும்
  • உடல் எடை குறைவாகவுள்ளவர்கள் அடிக்கடி பன்னீரை எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிப்பர்.
குறிப்பு:
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோய்வுள்ளவர்கள், இரத்த அழுத்தம்வுள்ளவர்கள் பன்னீரை அடிக்கடி சாப்பிடக் கூடாது.
SUBSCRIBE http://www.youtube.com/c/LeesKitchen இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் LEES KITCHEN சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி... நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள். தொடர்பு கொள்ள : LEES KITCHEN : 8883543999
**** For More Interesting things Click the links ****



Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்