சமயோசித அறிவு வெற்றி தரும்


ராமன் தன் முடிவைத் தேர்ந்தெடுத்தல்
சமயோசித அறிவு வெற்றி தரும்
ராமன் ஒவ்வொரு நாளும் குளிப்பதற்கு ஆற்றங்கரைக்குச் செல்வான். குளித்து விட்டு அந்தக் கரையில் உள்ள காளி கோவிலில் கன் காலை வழிபாடுகளைச் செய்து, காளியின் ஆசியை வேண்டுவான்

ஒரு நாள் வழக்கமான வழிபாடுகளை முடித்துக் கொண்டு கோவிலிருந்து திரும்புகையில் யாரோ தன்னைப் பெயர் செல்லி அழைப்பதைக் கேட்டான்

ராமன் நின்று திரும்பிப் பார்த்தான். ஒரு இளைஞன் தலையில் ஒரு சுமையை வைத்துக் கொண்டு ராமனை நோக்கி ஓடி வந்தான். யார் நீ? என்று ராமன் கேட்டான்

"உனக்கு என்னைத் தெரியவில்லையா? என் பெயர் ராகவன். உன்னுடைய அம்மாவின் அண்ணணுடைய பெண்ணின் மூத்த பையன்," என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ராமனுக்கு, ராகவனைப் பார்த்ததாகத் தெரியவில்லை, இருந்தாலும் உறவினன் என்று அவன் கூறுவதால், அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவியிடம் தூரத்து உறவினன் என்று அறிமுகப்படுத்தினான்.

அந்த விருந்தாளி உண்மையில் ராமனுடைய உறவினனாக நடிக்க வந்தவன். அவன், விசயநகர அரசர் கிருஷ்ண  தேவராயரைக் கொல்வதற்காக எதிரிப் படையால் அனுப்பப்பட்ட ஒற்றன. ராமன், அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். அதனால், ஒற்றன் ராமனைத் தேர்ந்தெடுத்தான். " ராமனுடைய உறவினன் என்றால் அரசரைச் சுலபமாகச் சந்திக்கலாம். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தான் வந்த காரியத்தை முடிக்கலாம், "  என்று எண்ணினான்.

அரசர், ராமன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதால் அரச சபையின், முக்கிய விபரங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அரசர் ஒரு அவசரமான மிகவும் முக்கியமான ஒன்றை ராமனிடம் சொல்லி அதை அடுத்த நாட்டு மன்னனிடம் தெரிவிக்குமாறு கூறினார்

ராமன் அங்கு இல்லாததை ஒற்றன் அறிந்தான். அதுவே அரசரைக் கொல்லச் சரியான சமயம் என்று எண்ணினான், ராமனுடைய மனைவி அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு எதோ வேலையாகச் சென்றிந்தாள். வீட்டில் ஒருவரும் இல்லை. " ஏதாவது தந்திரம் செய்து அரசரை ராமன் வீட்டிற்கு வரவழைத்து விட்டால் அவரைக் கொன்று விடலாம்," என்று எண்ணினான். அதற்காக ஒரு தந்திரம் செய்தான். ராமனுடைய மனைவிக்குத் திடீரென உடல் நலம் சரியில்லை என்று அரசருக்குத் தகவல் அனுப்பினான்.

அரசருக்கு, ராமனின் குடும்பத்தினர் மீது தனி அக்கறை இருந்தது, ராமனும் இங்கு இல்லை, அதனால், தானே சென்று பார்ப்பதற்காகத் தனது காவலர்களுடன் அங்குச் சென்றார்.

ஆனால், ராமன் வீட்டை அடைந்ததும், அரசருக்கு ஏதோ சந்தேகம் தோன்றியது. அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. இதில் ஏதோ மர்மம் உள்ளது என்று அரசர் அறிந்தார்.

அரசருக்கு முன்பே அங்கு வந்து ராகவன் ஒளிந்திருந்தான், அரசர் வந்ததும் அவர் மேல் பாய்ந்து அவரைக் கொல்ல முயன்றான், திடுக்கிட்டார் அரசர். ஆனால், ஒற்றனை விட அரசர் மிகுந்த வீரம் உள்ளவர். ஆதலால், அவனை மேற்கொண்டு தம்மைத் தாக்க விடாமல் தடுத்தார். அவனைக் காவலர்களிடம் ஒப்படைத்தார்.

"அறிவாளியான ராமன் எவ்வாறு ஒற்றனிடம் ஏமாந்தான்? எப்படி இவ்வளவு முட்டாள் ஆனான்?" என்று அரசர் மிகுந்த கோபம் கொண்டார்.

ராமன் திரும்பி வந்ததும் அவனது மனைவி நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறினாள். தனது முட்டாள்தனத்தினால் அரசருக்கு ஏற்பட இருந்த ஆபத்தை எண்ணி ராமன் வருந்தினான். அரசர் அதற்காகத் தனக்குக் கடுமையான தண்டனையைத் தருவார் என்று எண்ணினான். அதிலிருந்து தப்ப முடியாது என்றும் எண்ணினான்.

அரசர், ராமனைச் சபைக்கு வரும்படி கட்டளையிட்டார்." ராமா! நீ ஒரு சரியான முட்டாள். எப்படி நீ முன்பின் தெரியாத ஒருவனை உன் வீட்டிற்குள் வைத்துக் கொண்டாய்? உனது உறவினன் என்று கூறியவனை நீ இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா? உன்னுடைய முட்டாள் தனத்தால் என்னுடைய உயிரே போக இருந்தது. இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும்," என்று கட்டளையிட்டார்.

"நீ எவ்வாறு இறக்க விரும்புகிறாய்? அதற்கான வழியைச் சொல்லு. அவ்வாறு இறக்க நான் உனக்கு அனுமதியளிக்கிறேன்," என்று அரசர் கூறினார்.

தெனாலி ராமன் வணக்கத்துடன் அரசரை வணங்கி, " அரசே, நான் உங்கள் அரண்மனையில் வயதானவனாகி இறக்க விரும்புகிறேன்," என்றான்.

அரசருக்கு ராமனுடைய விநோதமான பதில் குதூகலத்தை அளித்தது. அவனுடைய தாழ்மையான வேண்டுகோள் அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. அதனால், அவர் ராமனை மன்னித்து விட்டார்.

மறுபடியும் தெனாலி ராமன் தன் கூர்மையான அறிவால் அரசரை மகிழ்வித்துத் தண்டனையிலிருந்து தப்பினான்.

"சமயோசித அறிவு வெற்றி தரும்."

**** For More Interesting things Click the links ****

http://www.youtube.com/c/MEDIATVmadurai

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்