தினமும் 10 குறிப்புகள் || மருத்துவக்குறிப்புகள்
- தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும்
- முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது
- கசகசாவை மிக்சியில் அரைத்துக் கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரைப் போட்டுச் சாப்பிட வெயில் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குறையும்.
- இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊர வைத்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும்
- கடைந்தெடுத்த மோரில் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சேர்வையடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது
- வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.
- உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது
- சிலருக்கு வேர்க்கடலை சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். அவ்வாறான பிரச்சனையுள்ளவர்கள் வேர்கடலையுடன் வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்காமல் தடுக்கலாம்.
- மண்பாத்திரத்தில் காய்ச்சிய நீரை உணவிக்குப் பின் சாப்பிட்டால் புளியேப்பம், காய்ச்சல் நீங்கும்
- தீராத இருமல் இருந்தால், மிளகைப்பொடி செய்து வெல்லத்துடன் கலந்து, சிறிது நேரம் தொண்டையில் வைத்திருந்து அந்தச் சாற்றை விழுங்கினால் சட்டென்று இருமல் நிற்கும்
**** For More Interesting things Click the links ****
Comments
Post a Comment
subscribe Media 1 Television