ஹோம்மேட் மேங்கோ ஃப்ரூட்டி | Home Made Mango Frooti


தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 2 கப் நறுக்கியது
மாங்காய் - 1/2 கப் நறுக்கியது
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 3 கப்

செய்முறை:

  • கடாயில் மாம்பழம் மற்றும் மாங்காய், 1 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  • அவ்வப்போது திறந்து நன்கு கிளறி விடவும்
  • நன்கு வெந்ததும் 1/2 கப் சர்க்கரை சேர்த்து கிளறி மேலும் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்
  • நன்கு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்
  • ஆறியதும் சல்லடையில் தண்ணீரை மட்டும் வடிகட்டி பிரித்து எடுத்துக் கொள்ளவும்
  • பின்னர் அதிலுள்ள மாம்பழ விழுதை மிக்ஸியில்  நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது வடிகட்டிய மாம்பழ தண்ணீருடன் அரைத்த விழுதையும் கட்டியில்லாமல் வடிகட்டி அதில் சேர்க்கவும்.
  • பின்னர் மீதமுள்ள 4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்தவுடன் பரிமாறவும்.
  • ஹோம்மேட் மேங்கோ ஃப்ரூட்டி தயார். 

பயன்கள்:

  • மாம்பழ சாற்றிக்கு வெயிலினால் ஏற்படும் மயக்கத்தை சரி செய்யும் தன்மையுள்ளது
  • வெப்பத்தினால் ஏற்படும் தோல் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு தோல் பளபளப்புடன் இருக்கச் செய்து தோல் சுருக்கத்தை நீக்க வல்லது.
  • தினமும் மாம்பழச் சாறு அருந்திவந்தால் நரம்புகள் நன்கு பலம்பெற்று நரம்பு தளர்ச்சி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்
  • நார்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்கிறது
  • கண்களில் ஏற்படும் நீர்வடிதல், கண் அரிப்பு, கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவற்றை குணப்படுத்த வல்லது
  • மூளை சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது
  • மேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கி கருப்பையில் இருக்கும் தீங்குமிக்க கழிவுகளை நீக்குகிறது


**** For More Interesting things Click the links ****




Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்