லெமன் சேமியா | Lemon Vermicelli


Lemon Vermicelli
தேவையான பொருட்கள்:
சேமியா - 250 கிராம்
எலுமிச்சம் பழம் - 1

அரைக்க:
பச்சை மிளகாய் - 2
மல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து

தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன்
மிளகுப்பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
  • முதலில் சேமியாவை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • கடாயில் 400 ml தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக வைக்து நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு அரைத்தவற்றை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்
  • பச்சைவாசனை போனதும் வேகவைத்த சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  • அடுப்பை அணைத்து விட்டு சேமியா மீது எலுமிச்சைசாறு சேர்த்து கிளறி கொத்தமல்லிதழை தூவி சூடாக பரிமாறவும்
  • சூடான சுவையான எலுமிச்சை சேமியா தயார். உடனடியாக செய்து சாப்பிட கூடியது. பயணங்களின் போது சுலபமாக செய்யக்கூடிய உணவாகும்.

**** For More Interesting things Click the links ****

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்