ராஜ்மா மசாலா | Rajma Masala for chappathi
ராஜ்மா மசாலா
தேவையான பொருட்கள்
ராஜ்மா - 2 கப்
தக்காளி - 5
வெங்காயம் - 3
ஏலக்காய் - 2
பட்டை - 2
கிராம்பு - 4
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு போஸ்ட் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
- ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை தனிதனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஊறவைத்த ராஜ்மாவை குக்கரில் உப்புச் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்
- பின்னர் அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொறிந்ததும் அரைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின்னர் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்
- அதன் பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகப்பொடி சேர்த்து மாசலா வாசனை போக வதக்கவும்
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- கிரேவி பதம் வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
- சூடான சுவையான ராஜ்மா மசாலா தயார்.
- சப்பாத்திற்கு அட்டகாசமான சைட் டிஷ்
பயன்கள்
- ராஜ்மா எனப்படும் சிவப்பு காராமணியில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது
- புற்றுநோய் செல்கள் அதிகரிக்காமல் தடுக்க இது பெருமளவில் உதவுகிறது
- கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது
- ராஜ்மாவில் பொட்டாசியம் சத்து உள்ளது எனவே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவி செய்கிறது
- கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் எலும்புகள் தேய்மானம் ஆகமால் தடுக்கிறது. மேலும் மூட்டு வலி வாராமல் தடுக்கிறது.
- இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது
- செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது
- வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் மூளையின் நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது
- நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- ஃபோலிக் அமிலம் எனப்படும் சத்து இதில் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது
**** For More Interesting things Click the links ****
Comments
Post a Comment
subscribe Media 1 Television