பஞ்சாபி ஸ்பேஷல் - கீமா மட்டர்
பஞ்சாபி ஸ்பேஷல்: கீமா மட்டர்
தேவையான பொருட்கள்:
மட்டன் கொத்துக்கறி - 500கிராம்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
வேகவைத்த பட்டாணி - 1 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1/4 கப்(நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
- அரைக்க கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும்
- பின்னர் தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கிக் கொள்ளவும்
- அதன்பிறகு சுத்தம்செய்த கொத்துக்கறியை சேர்த்து நன்கு கிளறவும்
- தணலை சிம்மில் வைத்து வேக வைத்த பட்டாணி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறிவிட்டு உப்பைப்போட்டு நீரை ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்
- மட்டன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் மூடியிருக்கும் தட்டை நீக்கி விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு கரம்மசாலாத்தூளைச் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழையை மேலே தூவி சூடாக பரிமாறவும்
- சாதம், சப்பாத்தி அல்லது ரொட்டியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்
Comments
Post a Comment
subscribe Media 1 Television