பஞ்சாபி ஸ்பேஷல் - கீமா மட்டர்
பஞ்சாபி ஸ்பேஷல்: கீமா மட்டர் தேவையான பொருட்கள்: மட்டன் கொத்துக்கறி - 500கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 1 வேகவைத்த பட்டாணி - 1 கப் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் தனியாத்தூள் - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 1/4 கப்(நறுக்கியது) உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன் (நறுக்கியது) இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது) பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது) செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும் பின்னர் தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கிக் கொள்ளவும் அதன்பிறகு சுத்தம்செய்த கொத்துக்கறியை சேர்த்து நன்கு கிளறவும் தணலை சிம்மில் வைத்து வேக வைத்த பட்டாணி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறிவிட்டு உப்பைப்போட்டு நீரை ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும் மட்டன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் மூடியிருக்கும் தட்டை நீக்கி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு கரம்மசாலாத்தூளைச் சேர்த்...