Posts

Showing posts from May, 2020

ஹீமோகுளோபின் அதிகரிக்க இதை சாப்பிடுங்க

Image
பீட்ரூட் ஜாம் தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 1/4 கிலோ பேரீச்சம் பழம் - 1/4 கிலோ (கொட்டை நீக்கியது) தேன் - 25 கிராம் செய்முறை: பீட்ரூட்டை நன்கு கழுவி தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும் பேரீச்சம் பழத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் பின்னர் பீட்ரூட் மற்றும் பேரீச்சம் பழம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அரைத்த விழுதில் தேன் சேர்த்து நன்கு கிளறவும். இனிப்பு வேண்டுமென்றால் சிறிது வெல்லம் சேர்த்து கொள்ளவும் பயன்கள் : இரத்த சோகையிலிருந்து விடுபட சுவைமிகுந்த அருமையான மருந்து நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது நார் சத்து அதிகளவில் உள்ளது **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen

கர்ப்பைப்பை வலிமைப்பெற அருமையான மருந்து

Image
அத்திப் பழ ஜீஸ் | Fig Juice தேவையான பொருட்கள்: உலர்ந்த அத்திப் பழம் - 5 தண்ணீர் - 1 கப் தேன் - 1 தேக்கரண்டி செய்முறை: 1 கப் தண்ணீரில் சுமார் ஐந்து உலர்ந்த அத்திப் பழங்களை சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும் அரைத்த விழுதுடன்  தேன் கலந்து சாப்பிடவும். விருப்பப்பட்டால் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். பயன்கள்: உலர்ந்த அத்திப்பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கல் பிரச்சனையும் தீர்ந்துவிடும். 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உள்மூலம், வெளி மூலம் ஆகியவைற்றிலிருந்து நிவாரணம் பெறலாம் உணவு சாப்பிட்ட பின் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அத்திப்பழங்களை வினிகரில் ஊற வைத்து தினமும் இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கத்திலிருந்து விடுபடலாம்.  இரத்த உற்த்திக்கு மிகச் சிறந்த மருந்தாகும். உடலுக்கு தேவையான பலம் மற்றும் சுறுசுறுப்பைத் தருகிறது. கர்ப்பப்பைக்கு நல்ல வலுவைத் தந்து கருச்சிதைவை தடுக்கிறது

ராஜ்மா மசாலா | Rajma Masala for chappathi

Image
ராஜ்மா மசாலா தேவையான பொருட்கள் ராஜ்மா - 2 கப் தக்காளி - 5 வெங்காயம் - 3 ஏலக்காய் - 2 பட்டை - 2 கிராம்பு - 4 மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு போஸ்ட் - 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப நெய் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை தனிதனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஊறவைத்த ராஜ்மாவை குக்கரில் உப்புச் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் பின்னர் அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொறிந்ததும் அரைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும் அதன் பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகப்பொடி சேர்த்து மாசலா வாசனை போக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்க

தினமும் 10 குறிப்புகள் || மருத்துவக்குறிப்புகள்

Image
தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும் முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது கசகசாவை மிக்சியில் அரைத்துக் கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரைப் போட்டுச் சாப்பிட வெயில் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி  குறையும். இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊர வைத்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும் கடைந்தெடுத்த மோரில் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சேர்வையடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும். உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது சிலருக்கு வேர

லெமன் சேமியா | Lemon Vermicelli

Image
Lemon Vermicelli தேவையான பொருட்கள்: சேமியா - 250 கிராம் எலுமிச்சம் பழம் - 1 அரைக்க: பச்சை மிளகாய் - 2 மல்லித்தழை - 3  டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - 3 கொத்து தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1  டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - 1  டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன் மிளகுப்பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: முதலில் சேமியாவை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் கடாயில் 400 ml தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக வைக்து நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும். பிறகு அரைத்தவற்றை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும் பச்சைவாசனை போனதும் வேகவைத்த சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு சேமியா மீது எலுமிச்சைசாறு சேர்த்து கிளறி கொத்தமல்லிதழை தூவி சூடாக பரிமாறவும் சூடான சுவையான எலுமிச்சை சேமிய

சமயோசித அறிவு வெற்றி தரும்

Image
ராமன் தன் முடிவைத் தேர்ந்தெடுத்தல் சமயோசித அறிவு வெற்றி தரும் ராமன் ஒவ்வொரு நாளும் குளிப்பதற்கு ஆற்றங்கரைக்குச் செல்வான். குளித்து விட்டு அந்தக் கரையில் உள்ள காளி கோவிலில் கன் காலை வழிபாடுகளைச் செய்து, காளியின் ஆசியை வேண்டுவான் ஒரு நாள் வழக்கமான வழிபாடுகளை முடித்துக் கொண்டு கோவிலிருந்து திரும்புகையில் யாரோ தன்னைப் பெயர் செல்லி அழைப்பதைக் கேட்டான் ராமன் நின்று திரும்பிப் பார்த்தான். ஒரு இளைஞன் தலையில் ஒரு சுமையை வைத்துக் கொண்டு ராமனை நோக்கி ஓடி வந்தான். யார் நீ? என்று ராமன் கேட்டான் "உனக்கு என்னைத் தெரியவில்லையா? என் பெயர் ராகவன். உன்னுடைய அம்மாவின் அண்ணணுடைய பெண்ணின் மூத்த பையன்," என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ராமனுக்கு, ராகவனைப் பார்த்ததாகத் தெரியவில்லை, இருந்தாலும் உறவினன் என்று அவன் கூறுவதால், அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவியிடம் தூரத்து உறவினன் என்று அறிமுகப்படுத்தினான். அந்த விருந்தாளி உண்மையில் ராமனுடைய உறவினனாக நடிக்க வந்தவன். அவன், விசயநகர அரசர் கிருஷ்ண  தேவராயரைக் கொல்வதற்காக எதிரிப் படையால் அனுப்பப்பட்ட ஒற்றன. ராமன், அரசரின் நம்ப

ஹோம்மேட் மேங்கோ ஃப்ரூட்டி | Home Made Mango Frooti

Image
தேவையான பொருட்கள்: மாம்பழம் - 2 கப் நறுக்கியது மாங்காய் - 1/2 கப் நறுக்கியது சர்க்கரை - 1/2 கப் தண்ணீர் - 3 கப் செய்முறை: கடாயில் மாம்பழம் மற்றும் மாங்காய், 1 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும் அவ்வப்போது திறந்து நன்கு கிளறி விடவும் நன்கு வெந்ததும் 1/2 கப் சர்க்கரை சேர்த்து கிளறி மேலும் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும் நன்கு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும் ஆறியதும் சல்லடையில் தண்ணீரை மட்டும் வடிகட்டி பிரித்து எடுத்துக் கொள்ளவும் பின்னர் அதிலுள்ள மாம்பழ விழுதை மிக்ஸியில்  நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வடிகட்டிய மாம்பழ தண்ணீருடன் அரைத்த விழுதையும் கட்டியில்லாமல் வடிகட்டி அதில் சேர்க்கவும். பின்னர் மீதமுள்ள 4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்தவுடன் பரிமாறவும். ஹோம்மேட் மேங்கோ ஃப்ரூட்டி தயார்.  பயன்கள்: மாம்பழ சாற்றிக்கு வெயிலினால் ஏற்படும் மயக்கத்தை சரி செய்யும் தன்மையுள்ளது வெப்பத்தினால் ஏற்படும் தோல் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு தோல் பளபளப்புடன் இருக்கச் செய்து தோல் சுருக்கத்தை நீக்க வல்லது