Posts

Showing posts from March, 2020

Home Remedies to reduce belly fat

Image
Honey & Lemon Mix a tablespoon of honey and fresh lemon juice with one medium glass of hot water. This is best done first thing after waking up in the morning. Honey helps in dissolving the fat while vitamin c in lemon juice helps in flushing out the fat in the body. Hot water in an empty stomach: Drinking around 1 litre of lukewarm water first thing in the morning even before answering natures call helps to cleanse the body thoroughly of the toxic wastes, tones the metabolic system and thus helps in fat loss Raw Tomatoes: Raw tomatoes are rich in fibre, water and phytonutrients like lycopene. Fibre is good for dissolving the fat in the body while lycopene is an excellent antioxidant which reduces the oxidative stress in the body Ginger, Honey and Pepper: Make a tea by boiling ginger in water. Add honey and pepper to it. Ginger and pepper are thermogenic they increase the metabolic rate while honey helps in dissolving the fat Mint leaves, H...

தொப்பைக்கு குட்பை

Image
தொப்பையைக் குறைப்பதற்கு நாம்  எதையெதை சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இது தான்  முதல் படி. துரித உணவுகள் சாப்பிடுவதில் யாருக்கு தான் ஆசை இல்லை? ஆனால் அவற்றால் உடலின்  மையப்பகுதியான வயிற்றில் சேரும் கொழுப்பைக் குறைப்பதென்பது சுலபமான காரியமில்லை. உங்களுக்கு எதில் விருப்பம் அதிகம்? துரித உணவுகள் வேண்டுமா அல்லது தொப்பை இல்லாத வயிறு வேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள் உடல் எடையை குறைக்க  சாப்பிட வேண்டியவைகள்: பழங்கள்:  ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, ஆப்பிள், தர்பூசணி காய்கறிகள்: முட்டைகோஸ், ப்ரோக்கோலி, கீரை, பீன்ஸ், பட்டாணி இதரவைகள்: ஓட்ஸ், பாதாம் பருப்பு, முட்டை, தண்ணீர் மீன் வகைகள் : காலமன், கானாங்கெழுத்தி, டூனா  ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி ஆகிய பழங்கள் சிறந்த கொழுப்புருக்கிகளாக செயல்படுகின்றன, வைட்டமின்சி அதிகமுள்ள இப்பழங்கள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து வேகமாக கொழுப்பை உருக்குகின்றன. ஆகவே உடல் எடை குறைப்பை துவங்கியவுடன் ஆரஞ்சு பழங்களுடன், ஆப்பிள், தர்பூசணி போன்ற கொழுப்புருக்கிப் பழங்களை உட்கொள்ளுதல் நல்லது. தாதுக்கள் அதிகமுள்ள ...

மூட்டு வலி இனி வரவே வராது

Image
முதிர்வயதை நெருங்கும் போது மூட்டு வலிதான் முதலில் எட்டிப்பார்க்கும். மூட்டுகள் சிதைவதால் மூட்டு வலி உண்டாகிறது. மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் மூட்டு வலிக்கு காரணம், வயதாகும் போது எலும்புகளின் முனைகளின் மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும், எனவே எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் பிரச்சனையே மூட்டு வலியாகும். முக்கிய காரணங்கள்: பரம்பரை, அதிக உடல் எடை, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து இருத்தல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், எலும்பு முறிவு போன்றவையே இதற்கு முக்கிய காரணங்களாகும். அறிகுறிகள்: காலையில் எழுந்திருக்கும்போது வலி அதிகரித்தும், நேரம் செல்லச் செல்லக் குறைந்தும் காணப்படும். நடக்கும் போது அதிகரித்தும், ஓய்வின் போது வலி குறைவாகவும் இருக்கும். மூட்டுகளை அசைக்கும் போது ஒரு விதமான ஒலியை உணரலாம், இணைப்புகளைச் சுற்றியுள்ள தசைகளும் தசை நாண்களும் வலிவிழந்து விறைப்புடன் காணப்படும்.  அதிகப்படியாக எலும்பு வளர்ச்சிகளும், சிறு குருத்துகளும் வளரும், மூட்டுகள் வீங்கிக் ...

Home Made Face Cleansers

Image
Home Made Facial Cleansers: The first step in caring for your skin is cleansing. Dust, perspiration, grease, stale makeup, dirt, and bacteria collect on your skin and make your skin prone to many diseases. This is why your skin requires a thorough cleansing routine. Otherwise, these impurities clog the pores giving way to many skin problems. Your face should be cleaned every day with a proper cleansing cream or lotion which is suitable for your skin. Here are some easy to make face cleansers suitable to different. Milk Cleanser: Milk is a natural cleanser. It's good for all skin types. Take a cup of cold raw milk. Soak a cotton ball in the milk and dab it on your face, forehead, and neck. When it dries up repeat again. let it stand for some minutes and wash off. it leaves the skin baby soft. Gram flour and turmeric cleanser for oily skin: Take two tablespoons of gram flour and add one teaspoon of turmeric powder. Add enough milk to make a smooth paste. Apply it on th...

Hair Spa Treatment : At Home

Image
Hair Spa At Home Olive Oil Massage: A natural solution to your hair care Olive oil having rich in vitamin E, antioxidants and nutrients, aids in soothing itchiness and irritation of the scalp and moisturizes it intensely in order to reduce dryness. It helps to reduce dandruff. Start by massaging a sufficient amount of olive oil gently on your hair Leave it for 15 min And then soak a cotton towel in warm water. Squeeze it and remove any excess water and wrap it around your hair Now leave the towel to nicely steam your hair for about 10 min After that wash your hair with a mild shampoo and rinse it well. If you want dandruff-free smooth hair use this olive oil massage regularly.

மோர் இல்லா மோர்

Image
மோர் இல்லா மோர் - சோயா பீன்ஸ்: உடலுக்கு நல்ல வலிமையை தருவதோடு மூளைக்கும் நல்ல வளர்ச்சியைத் தருகிறது. இதில் புரோட்டீன் அதிகமுள்ளது. இதனை மோராக பயன்படுத்தினால் எல்லா வயதினருக்கும் நன்மையை அளிக்கிறது. தேவையான பொருட்கள் சோயா பீன்ஸ் - 50 கிராம் எலுமிச்சை - 1 செய்முறை சோயா பீன்ஸை 18 மணி நேரம் ஊற வைத்து 18 மணி  நேரம் முளைக்கட்டி வைக்கவும். பிறகு அதை எடுத்து நன்றாகக் கழுவி, பீன்ஸை அரைத்து 6 கப் தண்ணீர் சேர்த்து பால் எடுக்கவும் லேசாயக காய்ச்சி பால் ஆறியவுடன் எலுமிச்சை சாறை ஊற்றி வைத்தால் 2 மணி நேரத்தில் சுவையான தயிர் ரெடி. அத்துடன் தேவைக்கு தண்ணீர் சேர்த்து கடைந்தால் சுவையான மோர் தயார்.

24 மணி நேரத்தில் நமது உடலில் என்னென்ன நடக்கிறது

Image
நமது இதயம் 1,03,689 தடவை துடிக்கிறது நமது இரத்தம் 26,88,000 கி.மீ தூரம் செல்கிறது நமது நகம் 0.000115 செ.மீ வளர்கிறது நமது உரோமம் 0.004285 செ.மீ வளர்கிறது நமது உடல் 1.43 பைண்ட் வியர்வையை வெளியேற்றுகிறது. ( ஒரு பைண்ட் 0.568 லிட்டருக்குச் சமமானது) நமது உடல் 866 டிகிரி வெப்பத்தை வெளியேற்றுகிறது நாம் 23,043 தடவைகள் சுவாசிக்கிறோம் நாம் 483 கன  அடி காற்றை உள்ளிழுக்கிறோம் நாம் 3.25 இராத்தல் உணவு உண்கிறோம் நாம் 2.90 இராத்தல் நீர்ப் பொருளை அருந்துகிறோம்

இதயம் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்

Image
மனித உடலிலுள்ள சிரைகளையும், தமனிகளையும் ஒன்றாக இணைந்தால் பூமியை 14 முறை சுற்றிவரும் அளவு நீளம் இருக்கும் பிறந்த குழந்தையின் இருதயம் நிமிடத்திற்கு 135 தடவை துடிக்கும் 6 வயதில் அது 96 ஆகக் குறையும் நடுத்தர வயதில் 72 முறை துடிக்கும் 50 வயதுக்கு மேல் 50 தடவை துடிக்கும் மனித இதயம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முறை துடிக்கிறது

உடல் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் : நுரையீரல்

Image
நமது உடலிலுள்ள அத்தனை இரத்தமும் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை நுரையீரலுக்குள் வந்து போகின்றன ஒரு மனிதனுடைய நுரையீரலைப் பாய் போல் விரித்தால் அது 150 சதுரமீட்டர் பரப்புள்ளதாக இருக்கும் 60 வயது வரை வாழந்த ஒருவருடைய நுரையீரல்களுக்குள் ஒரு கோடி கன அடி காற்று சென்று வந்திருக்கும் நாம் இருபது நிமிடங்களில் 1000 கன அடி காற்றை சுவாசிக்கின்றோம்

உடல் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் : மூளை

Image
மூளை செல்கள் புதிதாக தோன்றுவது இல்லை மனித மூளை 2 முதல் 6 வயது வரை மட்டுமே வளர்கிறது மூளையின் நரம்புகள் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனது நல்ல ஆரோக்கியமான ஒரு மனித மூளையின் எடை 1 கிலோ 360 கிராம் பிறந்த குழந்தையின் மூளையின் எடை 370 கிராமிலிருந்து 400 கிராம் வரை இருக்கும். ஒரு வயதாகும் போது அதே மூளையின் எடை இரண்டு மடங்கு அதிகரிக்கும். நமது மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி ரத்தம் தேவைப்படுகிறது மனித பாலுணர்ச்சியை மூளையிலுள்ள  ஹைப்போதலாமஸ் என்ற பகுதி தூண்டுகிறது மூளையின் ஒரு பகுதியான செரிப்ரம் என்ற சாம்பல் நிற மடிப்புகளை வைத்தே ஒருவனின் புத்திசாலித்தனம் அமைகிறது. இது மூளையின் மூன்றில் இரண்டு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. மூளைக்கு வலி கிடையாது. உடலின் மற்ற பாகங்களிலிருந்து வரும் நரம்பு செய்திகளை வலியாக உணருகிறது மூளையின் ஒரு பகுதியான பெர்னிக் என்ற பகுதியில் நம் ஞாபகச் சக்தி அடங்கியிருக்கிறது மூளை மண்டையோட்டில் ஸ்பீனோ ஸ்பைனல் ஃப்ளூயிட் என்ற திரவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்தத் திரவம் மூளைக்க பாயும் ரத்ததிலிருந்து உற்பத்தியாகிறது.

ஓம் என்னும் அற்புதம்

Image
ஓம் ஒரு அற்புதமான மந்திரம். யார் வேண்டுமானாலும் இதை உபயோகிக்கலாம்.இந்த மந்திரம் ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிகுந்த பலனைத் தருபவை. ஓம் எனும் மந்திரம் உடல்நலத்தையும் மனநலத்தையும் காக்க வல்லவை. ஓம் எனும் மந்திரம் உடலிலும் உள்ளத்திலும் பல நல்ல மாற்றங்களை நிகழ்த்தக் கூடியது. ஓம் எனும் மந்திரத்தை முறைப்படி உச்சரிக்கும் போது உடலில் அதிர்வலைகள் தோன்றுகின்றன. அ உ ம எனும் மூன்று ஒலிகளின் கூட்டுச் சேர்க்கையே ஓம் எனும் மந்திரமாகும். அ உ ம எனும் மூன்று எழுத்துக்களும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் குறிப்பனவாகும், ஓங்காரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் வாயிலாக மரணபயம் நீங்கும். உச்சரிப்பவரின் மனதில் அமைதி தவழும். ஓம் மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதை கற்போம். ஓம் மந்திரத்தை பாவமில்லாமல் அப்படியே ஓம் என்று உச்சரித்துப் பாருங்கள். எந்த புதிய அனுபமும் உங்களுக்குக் கிடைக்காது. பத்மாசனத்தில் அமர்ந்து முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி உட்காருங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். ஞான முத்திரையில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண மூச்சை முடிந்தமட்டும் நன்றாக வயிற்றை உள்...

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

Image
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வாசனை மிகுந்த நலங்குமாவு. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவருமே பயன்படுத்தலாம். குறிப்பு: ஆண்கள் பயன்படுத்தும்போது கஸ்தூரி மஞ்சளை தவிர்த்து விட்டு பாசி பயரினை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள்- 250கி பூலாங்கிழங்கு - 100கி ரோஜாப்பூ - 100கி ஆவாரம் பூ - 100கி கார்போக அரிசி - 100கி மலை நன்னாரி - 100கி பூஞ்சாந்துபட்டை-100கி திருமஞ்சனபட்டை - 100கி செண்பக மொட்டு - 50கி மரிக்கொழுந்து - 50 கி மருவு - 50கி பச்சிலை - 50கி கல்பாசி - 50கி அதிமதுரம் - 50கி கோரை கிழங்கு - 50கி வெட்டிவேர் - 25கி வசம்பு - 25கி லவங்க பத்திரி இலை - 25கி மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தும் நாட்டு  மருந்து கடைகளில் கிடைக்கும். இவை அனைத்தையும்  வெயில் நன்கு காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த குளியல் பொடி வாசனை மிகுந்தது மட்டுமல்லாமல் உடலில் உள்ள மருக்கள், முகத்தில் காணப்படும் கருவளையம், தோல் நோய்கள், வியர்வை நாற்றம், முகப்பரு, வாயைச் சுற்றியுள்ள கருமைபகுதியை மாற்றி முகம் பிரகாசமாக  இருக்கச் செய்யும். இத...

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

Image
திங்கட்கிழமை சிற்றுண்டி:  பாதாம் 4, முந்திரி 4, பேரிச்சை, நிலக்கடலை மதிய உணவு: ஏதேனும் ஒரு வகை கீரை சாதம் செவ்வாய்க்கிழமை சிற்றுண்டி:  நெய், தேன் மற்றும் பழம் கலந்த பழக்கலவை மதிய உணவு:  முட்டை மற்றும் உருளைக்கிழங்கு சாதம் புதன்கிழமை சிற்றுண்டி:  திராட்சை -10, கடலை மிட்டாய், நவதானியம் மதிய உணவு:  கேரட் அல்லது பீட்ரூட் சாதம் வியாழக்கிழமை சிற்றுண்டி:  வெல்லம் சேர்ந்த அவல் மற்றும் நெய் தடவிய பிரட் ரோஸ்ட் மதிய உணவு:  வெஜ்டபுள் சாதம்( கேரட், பீன்ஸ், பட்டாணி கலந்தது) வெள்ளிக்கிழமை சிற்றுண்டி:  கொண்டைகடலை, பட்டாணி, முளைகட்டிய பயிறு, சுண்டல் மதிய உணவு:  பருப்பு சாதம் மற்றும் வெண்டைகாய் பொறியல்

மனித உடல் உயிர் கடிகாரம்

Image
நம்முடைய உடலிலுள்ள முக்கிய 12 உடல் உள்ளுறுப்புகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்து வருகிறது. அதிகாலை 3 முதல்-5 வரை நுரையீரலுக்கான நேரம் காலை 5 முதல் - 7 வரை பெருங்குடலுக்கான நேரம் காலை 7 முதல் - 9 வரை வயிற்றுக்கான நேரம்  காலை 9 முதல் - 11 வரை மண்ணீரலுக்கான நேரம் காலை11 முதல் - 1 வரை இதயத்திற்கான நேரம் பிற்பகல் 1 முதல் - 3 வரை சிறுகுடலுக்கான நேரம் பிற்பகல் 3 முதல் - 5 வரை சிறுநீர்பைக்கான நேரம் மாலை 5 முதல் -7 வரை சீறுநீரகங்களுக்கான நேரம் இரவு 7 முதல் - 9 வரை பெரிகார்டியத்திற்கான நேரம் இரவு 9 முதல் - 11 வரை டிரிப்பிள் ஹீட்டர்கான நேரம் இரவு 11 முதல் - 1 வரை பித்தப்பைக்கான நேரம் இரவு 1 முதல் - 3 வரை கல்லீரலுக்கான நேரம் இந்த உடல் உயிர் கடிகாரத்தின் படி ஒவ்வொறு உறுப்பும் தன் அதிகப்படியான இயக்கத்திற்கு 2 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில் அந்த உறுப்பில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அது நமக்கு ஒரு சில அறிகுறிகளை சுட்டிக்காட்டும். அப்படி சுட்டிகாட்டும் நேரத்தைக் கொண்டு எந்த உறுப்பு பாதிப்படைந...

பட்டுப் புடவையை பராமரிப்பது எவ்வாறு?

Image
பட்டுப் புடவை வைத்திருக்கும் அலமாரி, பீரோவுக்குள் வசம்பு போட்டு வைக்க வேண்டும். அதனால் பூச்சிகள் வருவது தடுக்கப்படும். உடுத்திய புடவையை  நிழலில் சிறிது நேரம்உலர்த்திய பின்னர் மடித்து வைக்க வேண்டும். பட்டுப்புடவையை 3 மாத்திற்கு ஒரு முறை பிரித்து, மடித்து வைக்க வேண்டும். புடவையின் மீது வாசனை திரவியங்கள் அடிக்கக் கூடாது. வாசனை திரவியங்களால் ஜரிகை கருத்து போய்விடும். கைப்பிடியளவு பூந்திக் கொட்டையைப் பொடித்து தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். மறு நாள் நுரைத்து வந்து விடும். அதனை வடிகட்டி, அந்தத் தண்ணீரில் பட்டுப் புடவையை அலசினால், பளபளப்புடன் இருக்கும்.

காய்கறிகளை எவ்வாறு தரமாக வாங்குவது?

Image
தக்காளி:                 நல்ல சிவப்பாக இருக்கிற தக்காளிய வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் கெடாம இருக்கும் புடலங்காய் :                 கெட்டியாக இருந்தால் தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும் முருங்கைக்காய் :                 முருங்கைக் காயை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்லக்காய் கோவைக்காய் :                 முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க கூடாது. ஏனென்றால் பழுத்தது ருசி இல்லாமல் இருக்கும் பீர்க்கங்காய்:                 அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கனும். இந்த காயில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் பரங்கிக்காய்:                 கொட்டைகள் முற்றியதாக வாங்கவும் காலிபிளவர்: ...