Posts

பஞ்சாபி ஸ்பேஷல் - கீமா மட்டர்

Image
 பஞ்சாபி ஸ்பேஷல்: கீமா மட்டர் தேவையான பொருட்கள்: மட்டன் கொத்துக்கறி - 500கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 1 வேகவைத்த பட்டாணி - 1 கப் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் தனியாத்தூள் - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 1/4 கப்(நறுக்கியது) உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன் (நறுக்கியது) இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது) பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது) செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும் பின்னர் தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கிக் கொள்ளவும் அதன்பிறகு சுத்தம்செய்த கொத்துக்கறியை சேர்த்து நன்கு கிளறவும் தணலை சிம்மில் வைத்து வேக வைத்த பட்டாணி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறிவிட்டு உப்பைப்போட்டு நீரை ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும் மட்டன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் மூடியிருக்கும் தட்டை நீக்கி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு கரம்மசாலாத்தூளைச் சேர்த்...

கோகுலாஷ்டமி ஸ்பேஷல் இனிப்புச் சீடை

Image
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் உளுந்தம்பருப்பு - 1 - 1 1/2 டீஸ்பூன் வெல்லம் - 1/2 கப் வெள்ளை எள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு ஏலக்காய் பொடி - சிறிது செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். அதே கடாயில் அரிசி மாவையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து காய்ச்சி  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.  பாகு பதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தாலே போதும். ஒரு மிக்ஸிங் பவுலில் அரிசி மாவு மற்றும் வெல்லக் கரைசலைச் சேர்த்து பிசையவும்.  அதில் எள் மற்றும் வறுத்து பொடித்த உளுந்தம் மாவையும் சேர்த்து பிசைந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூடான சுவையான இனிப்புச் சிடை தயார். குறிப்பு: சீடை உடையாமலிருக்க மாவை ஒன்று அல்லது இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். உருண்டை தட்டும் போது ...

கிருஷ்ண ஜெயந்தி

Image
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு.  உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவுக்கு அருகில் உள்ள மதுரா நகரத்தில் தேவகி - வாசுதேவருக்கு 8வது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். மதுரா நகரில் பிறந்து கோகுலத்தில் எல்லாருக்கும் செல்லப்பிள்ளையாக கிருஷ்ணர் எனப்படும் கண்ணன் வளர்ந்தார்.  கிருஷ்ணர்  பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை.  தற்போது அந்த சிறைச்சாலைக்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே இன்றும் உள்ளது. கிருஷ்ணர் பிறந்த இடமாக  வழிபடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்தது. அன்று விரதம் இருந்து கண்ணனை வழிபட்டால் நாம் தெரிந்தும், தெரியாமலும்  செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய் பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டா...

கொய்யாப் பழ ஜூஸ்

Image
தேவையான பொருட்கள்: கொய்யாப்பழம் - 1 மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி இந்துப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - தேவைக்கேற்ப செய்முறை: கொய்யாப்பழத்தை நன்றாக கழுவி துருவி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கையால் பிசையுங்கள் அல்லது மத்தால் கடையுங்கள் அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள், சீரகம் சேர்த்துச் சாப்பிடுங்கள் இனிப்பு தேவையெனில் இந்துப்பை தவிர்த்து வெல்லத்தூள் தேவைக்கு சேர்த்து பருகலாம் பயன்கள்: வைட்டமின் சி சத்துள்ளது, மலச்சிக்கலை அகற்றுகிறது. சாப்பாட்டிற்குப் பின் சாப்பிட ஏற்ற உணவாகிறது. வைட்டமின் சி  சத்து நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. மேலும் நோய் தொற்று கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

Image
ஹோம்மேட் பீட்சா தேவையான பொருட்கள் பீட்சா பேஸ் செய்வதற்கு மைதா மாவு - 1 கப் தயிர் - 1/2 கப் பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 டீஸ்பூன் எண்ணெய்  - 1 1/2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் செய்வதற்கு நல்ல சிகப்பு தக்காளி - 6 வெங்காயம் - 1 காஸ்மீரி  மிளகாய் - 4 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் வெள்ளைப்பூடு - 10 சிறியது டெமேட்டோ கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப  சில்லிப்ளக்ஸ் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 2  டீஸ்பூன் ஓரிகேனோ -1/2 டீஸ்பூன் பேசில் -1/2 டீஸ்பூன் காய்கறிகள் - விருப்பதிற்கேற்ப பெரிய வெங்காயம் சிறியது - 1 ஸ்வீட் கார்ன் - 1 குடை மிளகாய் - பாதி மொஸரெல்லா சீஸ் - துருவியது செய்முறை சாஸ் செய்வதற்கு  முதலில் தக்காளியை  நன்கு கழுவி அதில் வெங்காயம் மற்றும் காஸ்மீரி மிளகாய் ஆகியவையுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  பின்னர் வேகவைத்த தக்காளியை தோலுரித்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் வெங்காயம் காஸ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  பின்னர் கடாய...

பசியின்மைக்கு அருமையான மருந்து

Image
இஞ்சி அல்வா: தேவையான பொருட்கள்: இஞ்சி சாறு - 1/2 கப் பேரீச்சம் பழம் - 500கிராம் (கொட்டை நீக்கியது) வெல்லம் - 1 கப் (பொடித்தது) ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 25 கிராம் செய்முறை: இஞ்சி சாறில் பேரீச்சம் பழம் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும் ஊறிய பின் அதனை மிக்ஸி அல்லது உரலில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக்  கொள்ளவும் அரைத்த விழுதுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும் பின்னர் வறுத்த முந்திரிப்பருப்பு இவைகளை சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். ஒரு தட்டில் நெய் சேர்த்து இஞ்சி அல்வா பரப்பி விடவும். பின் தேவையான வடிவத்தில் தூண்டு போட்டு சாப்பிடவும். நெய் சேர்க்க விரும்புவோர் தேவைக்கு சேர்த்துக் கொள்ளலாம் காலையில் சாப்பிடுவது மிகவும் ஏற்றது. பயன்கள்: பசியின்மையைப் போக்கி நாவிற்கு நல்ல ருசியை தருகிறது உடலுக்கு வலிமையை தருகிறது. வாத கோளாறுகள் வாராமால் தடுக்கிறது இரத்தக்குழாய்களில் கொழுப்புகளால் ஏற்படும் அடைப்பை நீக்கிவிடும் நார்சத்து இவற்றில் அதகளவில் உள்ளது **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatami...

ஹீமோகுளோபின் அதிகரிக்க இதை சாப்பிடுங்க

Image
பீட்ரூட் ஜாம் தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 1/4 கிலோ பேரீச்சம் பழம் - 1/4 கிலோ (கொட்டை நீக்கியது) தேன் - 25 கிராம் செய்முறை: பீட்ரூட்டை நன்கு கழுவி தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும் பேரீச்சம் பழத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் பின்னர் பீட்ரூட் மற்றும் பேரீச்சம் பழம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அரைத்த விழுதில் தேன் சேர்த்து நன்கு கிளறவும். இனிப்பு வேண்டுமென்றால் சிறிது வெல்லம் சேர்த்து கொள்ளவும் பயன்கள் : இரத்த சோகையிலிருந்து விடுபட சுவைமிகுந்த அருமையான மருந்து நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது நார் சத்து அதிகளவில் உள்ளது **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen

கர்ப்பைப்பை வலிமைப்பெற அருமையான மருந்து

Image
அத்திப் பழ ஜீஸ் | Fig Juice தேவையான பொருட்கள்: உலர்ந்த அத்திப் பழம் - 5 தண்ணீர் - 1 கப் தேன் - 1 தேக்கரண்டி செய்முறை: 1 கப் தண்ணீரில் சுமார் ஐந்து உலர்ந்த அத்திப் பழங்களை சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும் அரைத்த விழுதுடன்  தேன் கலந்து சாப்பிடவும். விருப்பப்பட்டால் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். பயன்கள்: உலர்ந்த அத்திப்பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கல் பிரச்சனையும் தீர்ந்துவிடும். 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உள்மூலம், வெளி மூலம் ஆகியவைற்றிலிருந்து நிவாரணம் பெறலாம் உணவு சாப்பிட்ட பின் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அத்திப்பழங்களை வினிகரில் ஊற வைத்து தினமும் இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கத்திலிருந்து விடுபடலாம்.  இரத்த உற்த்திக்கு மிகச் சிறந்த மருந்தாகும். உடலுக்கு தேவையான பலம் மற்றும் சுறுசுறுப்பைத் தருகிறது. கர்ப்பப்பைக்கு நல்ல வலுவைத் தந்து கருச்சிதைவை த...

ராஜ்மா மசாலா | Rajma Masala for chappathi

Image
ராஜ்மா மசாலா தேவையான பொருட்கள் ராஜ்மா - 2 கப் தக்காளி - 5 வெங்காயம் - 3 ஏலக்காய் - 2 பட்டை - 2 கிராம்பு - 4 மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு போஸ்ட் - 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப நெய் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை தனிதனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஊறவைத்த ராஜ்மாவை குக்கரில் உப்புச் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் பின்னர் அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொறிந்ததும் அரைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும் அதன் பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகப்பொடி சேர்த்து மாசலா வாசனை போக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்க...

தினமும் 10 குறிப்புகள் || மருத்துவக்குறிப்புகள்

Image
தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும் முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது கசகசாவை மிக்சியில் அரைத்துக் கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரைப் போட்டுச் சாப்பிட வெயில் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி  குறையும். இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊர வைத்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும் கடைந்தெடுத்த மோரில் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சேர்வையடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும். உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது சிலருக்கு...

லெமன் சேமியா | Lemon Vermicelli

Image
Lemon Vermicelli தேவையான பொருட்கள்: சேமியா - 250 கிராம் எலுமிச்சம் பழம் - 1 அரைக்க: பச்சை மிளகாய் - 2 மல்லித்தழை - 3  டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - 3 கொத்து தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1  டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - 1  டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன் மிளகுப்பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: முதலில் சேமியாவை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் கடாயில் 400 ml தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக வைக்து நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும். பிறகு அரைத்தவற்றை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும் பச்சைவாசனை போனதும் வேகவைத்த சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு சேமியா மீது எலுமிச்சைசாறு சேர்த்து கிளறி கொத்தமல்லிதழை தூவி சூடாக பரிமாறவும் சூடான சுவையான எ...

சமயோசித அறிவு வெற்றி தரும்

Image
ராமன் தன் முடிவைத் தேர்ந்தெடுத்தல் சமயோசித அறிவு வெற்றி தரும் ராமன் ஒவ்வொரு நாளும் குளிப்பதற்கு ஆற்றங்கரைக்குச் செல்வான். குளித்து விட்டு அந்தக் கரையில் உள்ள காளி கோவிலில் கன் காலை வழிபாடுகளைச் செய்து, காளியின் ஆசியை வேண்டுவான் ஒரு நாள் வழக்கமான வழிபாடுகளை முடித்துக் கொண்டு கோவிலிருந்து திரும்புகையில் யாரோ தன்னைப் பெயர் செல்லி அழைப்பதைக் கேட்டான் ராமன் நின்று திரும்பிப் பார்த்தான். ஒரு இளைஞன் தலையில் ஒரு சுமையை வைத்துக் கொண்டு ராமனை நோக்கி ஓடி வந்தான். யார் நீ? என்று ராமன் கேட்டான் "உனக்கு என்னைத் தெரியவில்லையா? என் பெயர் ராகவன். உன்னுடைய அம்மாவின் அண்ணணுடைய பெண்ணின் மூத்த பையன்," என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ராமனுக்கு, ராகவனைப் பார்த்ததாகத் தெரியவில்லை, இருந்தாலும் உறவினன் என்று அவன் கூறுவதால், அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவியிடம் தூரத்து உறவினன் என்று அறிமுகப்படுத்தினான். அந்த விருந்தாளி உண்மையில் ராமனுடைய உறவினனாக நடிக்க வந்தவன். அவன், விசயநகர அரசர் கிருஷ்ண  தேவராயரைக் கொல்வதற்காக எதிரிப் படையால் அனுப்பப்பட்ட ஒற்றன. ராமன், அரசரின் நம்ப...

ஹோம்மேட் மேங்கோ ஃப்ரூட்டி | Home Made Mango Frooti

Image
தேவையான பொருட்கள்: மாம்பழம் - 2 கப் நறுக்கியது மாங்காய் - 1/2 கப் நறுக்கியது சர்க்கரை - 1/2 கப் தண்ணீர் - 3 கப் செய்முறை: கடாயில் மாம்பழம் மற்றும் மாங்காய், 1 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும் அவ்வப்போது திறந்து நன்கு கிளறி விடவும் நன்கு வெந்ததும் 1/2 கப் சர்க்கரை சேர்த்து கிளறி மேலும் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும் நன்கு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும் ஆறியதும் சல்லடையில் தண்ணீரை மட்டும் வடிகட்டி பிரித்து எடுத்துக் கொள்ளவும் பின்னர் அதிலுள்ள மாம்பழ விழுதை மிக்ஸியில்  நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வடிகட்டிய மாம்பழ தண்ணீருடன் அரைத்த விழுதையும் கட்டியில்லாமல் வடிகட்டி அதில் சேர்க்கவும். பின்னர் மீதமுள்ள 4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்தவுடன் பரிமாறவும். ஹோம்மேட் மேங்கோ ஃப்ரூட்டி தயார்.  பயன்கள்: மாம்பழ சாற்றிக்கு வெயிலினால் ஏற்படும் மயக்கத்தை சரி செய்யும் தன்மையுள்ளது வெப்பத்தினால் ஏற்படும் தோல் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு தோல் பளபளப்புடன் இருக்கச் செய்து தோல் சுருக்கத்தை நீக...

உடலின் அடிப்படை தத்துவங்கள்: கபம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. கபம்: உடலுக்கு வலிமை, மூட்டுகளுக்கு வலிமை, தோலுக்கு பளபளப்பு, கண்ணுக்கு குளிர்ச்சி, தோல், மலம், சிறுநீருக்கு நிறம் தருதல், உடலுக்கு மென்மை, வளமை, பொறுமை தருதல், நாவுக்கு இனிப்புச் சுவை தோன்றல் போன்ற செயல்களைப் புரிகிறது கபம் தன்னிலையில் இருந்து மாறி நோய் நிலையில், உடல் குளிர்தல், அரிப்பு, மந்தம், உடல் பாரமாக இருத்தல், உடல் எண்ணெய்ப் பசையாக இருத்தல், உணர்விழப்பு, நாவில் அதிக இனிப்பு, சுவை காணுதல், தொழில் செய்ய உற்சாகமின்மை, பசியின்மை, உமிழ்நீர் சுரப்பு அதிகரித்தல், இருமல், மேல் மூச்சு, அதிக தூக்கம், தலைச்சுற்றல், தோல் வறட்சி, நெஞ்சு படபடப்பு ஆகிய அறிகு...

உடலின் அடிப்படை தத்துவங்கள்: பித்தம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. பித்தம்: உடலுக்கு வெப்பத்தைத் தருதல், உணவைச் செரித்தல், தோலுக்கு நிறத்தையும் பளபளப்பையும், பார்வை தருதல் போன்ற செயல்களபை் புரிகிறது. பித்தம் தன்னிலையிலிருந்து மாறி  நோய் நிலையை அடைந்தால் மலம், சிறுநீர், தோல் போன்றவை மஞ்சள் நிறமடைதல், அதிக பசி அல்லது பசியின்மை, உடல் கண் எரிச்சல், அதிக வியர்வை, தோல் சிவத்தல், நாவறட்சி, தாகம், புண்கள், கட்டிகள் தோன்றல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. பித்த தேகிகளின் உடலமைப்பு: நீள்வட்ட தாடைகள் நன்றாக வளைந்து, தெளிவாகத் தெரியும்படியான தெளிவான முக அமைப்பு இருக்கும் செம்பு போன்ற மஞ்சள் நிறம் இருக்கும் தெளிவான நிலையான...

உடலின் அடிப்படை தத்துவங்கள்: வாதம்

Image
உயிர்த்தாதுக்கள்: வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த்தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில் இம்மூன்றும் 1:1 / 2:1/4 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மனிதனுடைய முழுமையான ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாத காலமாகுவும் இடைப்பகுதி பித்த காலமாகவும் கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது. வாதம்: இது உடலுக்கு ஊக்கம் உண்டாக்கல், மூச்சு விடல், மூச்சு வாங்கல், மனம், மொழி, மெய்களுக்கு செயல் தருதல், சிந்தனை செய்தல், உடல் தாதுக்களுக்கு அணிச்சைச் செயல் தருதல், தொழில் செய்யும் முனபை்பைத் தருதல், மலம், சிறுநீர், விந்து, நாதம், இவற்றை வெளியேற்றுதல், கண்களுக்கு ஒளி தருதல், கண், காது, நாக்கு, மூக்கு, தோல் போன்ற ஐம்பொறிகளுக்கு வன்மை தருதல் போன்ற செயல்களைப் புரிகிறது. வாதம் தன்னிலையிலிருந்து மாறி நோய் நிலையை அடைந்தால், உடலில் வலி, உடல் உறுப்புகள் செயல் இழத்தல், தசைவலி, தசை மெலிவு, மூட்டுவலி, மூட்டு நழுவல், தோல் வறட்சி, மலச்சிக்கல், நீர் சுருக்கு, வய...

உடல் என்னும் இயந்திரம்

Image
இயற்கைக்கு மீறிய எச்செயலும் நோயை உண்டு பண்ணும் என்பது தெளிவு. இயற்கையோடு இயைந்ததே இந்த உடல். இதை தான் சித்தர்கள் அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்  என்று குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறு இந்த உலகமானது அண்டம், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம், மண் என்னும் ஐம்பூதங்களால் ஆனது இந்த பூவுலகில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் இந்தப் பூவுடலிலும் ஏற்படுகின்றன. இதனால்தான் வேனிற்காலத்தில் அம்மை, மஞ்சள் காமாலை, கட்டிகள் போன்ற வெப்பம் காரணமான நோய்களும், குளிர்காலத்தில் இரைப்பு, இளைப்பு, பீனிசம் போன்ற குளிர்ச்சி சம்பந்தமான நோய்களும் உடலில் தோன்றுகின்றன. அதுமட்டுமல்லாமலும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் உண்டாகும் கதிர்வீச்சு மாற்றம் உடலிலும், மனதிலும் பல பேருக்கு பாதிப்பை உண்டாக்குவதை கண்கூடாகக் காணலாம். இயற்கை அளித்த இந்த உடம்புதான் எத்தகைய அற்புதமானது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்பும் இயற்கையை படைத்த இறைவனால் எப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடும் அறிவியல் பூர்வமாக ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளனவே. அதுதான் மெய்ஞானத்த...

இளமையோடு இருக்கச் செய்யும் சூப்

Image
பேபிகார்ன் சூப்: தேவையான பொருட்கள்: பேபி கார்ன் - 200 கிராம் தக்காளி - 4 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் சோளமாவு - 4 டேபிள்ஸ்பூன் பால் - 300 மில்லி தண்ணீர் - 750 மில்லி மிளகுத் தூள் - சிறிதளவு சீரகத்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: நன்கு சுத்தம் செய்த பேபிகார்ன், தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும் காய்கறிகளை வேகும் வரை வதக்கி மசித்து வடிகட்டவும் பால் மற்றும்  சோளமாவு சேர்த்து வெள்ளைச்சாஸ் செய்யவும் இத்துடன் வடிகட்டிய காய்கறி கூழ் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும் குறிப்பு: பேபிகார்ன்க்கு பதில் காளான் / தக்காளி / பட்டாணி / கீரை / பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த பல வகையான சூப் தயாரிக்கலாம். பயன்கள்: சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. முதுமையினால் ஏற்படும் எலும்பு முறிந்து போவதை தவிர்க்கின்றன பேபிகார்னில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை விரட்டுகிறது இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது இரத்தசோகை ஏற்படுவதை தடுக்கிறது சருமங்களை இளமையோடு இருக்க...

இஞ்சியும் மெலனேஷியன் தீவும்

Image
இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன் ஆகியனவும் மாவுச்சத்தும் புரோட்டீனும் நிறைய உண்டு. இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை இரண்டாயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  சீனர்கள், சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர் மேற்கிந்தியத் தீவுவாசிகள். இஞ்சி, இச்சையைத் தூண்டும் போக மருந்து என சான்றிதழ் தருகிறது காமசூத்திரம். பசிபிக் கடலில் இருக்கும் மெலனேஷியன் தீவில் ஆண்கள் எல்லாரும் இஞ்சியை ஏராளமாக சாப்பிடுகிறார்கள். இதைச் சாப்பிடும் ஆண்களிடம் பெண்கள் சுலபமாக மயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். எட்டாம் ஹென்றியின் ஆட்சிக்காலத்தில் லண்டன் மாநகரில் பிளேக் நோய் வேகமாகப் பரவிப் பீதியூட்டியது. பிளேக்கை சமாளிக்க இஞ்சியைப் பயன்படுத்துமாறு மாநகர மேயருக்கு மன்னர் உத்தரவிட்டார். சாப்பிட்டதும் உடலில் சூட்டைப் பரப்பி, வியர்க்க வைக்கும் தன்மை கொண்டது இஞ்சி. வியர்த்ததும் ஜூரம்...

வாழைப்பழ பணியாரம் | Banana Paniyaram | Leela Tamil Kitchen

Image
Banana Paniyaram தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் - 1 சர்க்கரை -3 மேசைக்கரண்டி கோதுமை மாவு - 1/2 கப் மைதா மாவு - 1/2 கப் சமையல் சோடா  - 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை உப்பு - 1 சிட்டிகை செய்முறை: முதலில் வாழைப்பழம் மற்றும் சர்க்கரையை மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் அதில் கோதுமைமாவு மற்றும் மைதா மாவு சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பவுலில் அரைத்தவற்றை மிக்ஸியிலிருந்து எடுத்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பிறகு குழி பணியார கடாயில் எண்ணெய் ஊற்றி பாதி அளவிற்கு மாவை ஊற்றி  இருபுறமும் வேக விடவும். சூடான சுவையான வாழைப்பழ பனியாரம் ரெடி. **** For More Interesting things Click the links **** Blogg:  https://leelatamilkitchen.blogspot.com/ Facebook:   https://www.facebook.com/23LeelaKitchen Youtube:  http://www.youtube.com/c/LeesKitchen